இந்தியா

முஸ்லிம்களின் வாழ்வை குலைத்து காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம்: ஓராண்டு நிறைவை கொண்டாட பாஜக திட்டம்!

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்துக்கான சட்டப்பிரிவுகளை நீக்கி ஓராண்டு நிறைவுறுவதையொட்டி அதனை கொண்டாட பா.ஜ.கவினர் திட்டமிட்டுள்ளனர்.

முஸ்லிம்களின் வாழ்வை குலைத்து காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம்: ஓராண்டு நிறைவை கொண்டாட  பாஜக திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாஜக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதில் இருந்து நாட்டில் சிறுபாண்மையினர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரும் அச்சத்திலேயே உறைந்துள்ளனர்.

முந்தைய ஆட்சியின் போது நாட்டு மக்களை பொருளாதார ரீதியில் இன்னலுக்குள்ளாக்கிய மத்திய மோடி அரசு நடப்பு ஆட்சியில், தன்னுடைய தனிப்பெரும்பான்மையை பயன்படுத்தி மதவாதத்தை கையில் எடுத்து நாட்டையே உருக்குலைக்க திட்டமிட்டு அதனை செயல்படுத்தியும் வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370 உள்ளிட்ட சட்டப்பிரிவுகளுக்கு தடை விதித்து நீக்கியதோடு ஜம்மு காஷ்மீரை மூன்றாகவும் பிரித்து அறிவித்தது பாஜக அரசு.

முஸ்லிம்களின் வாழ்வை குலைத்து காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம்: ஓராண்டு நிறைவை கொண்டாட  பாஜக திட்டம்!

இதற்கு தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பெரும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. இதனால் ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவும் என மோடி அரசு வாய்ப்பந்தல் இட்டு வருகிறது. அதேபோல, முத்தலாக் தடைச்சட்டத்தையும் நிறைவேற்றியது.

இதனால் நாட்டில் பெரும் அதிர்வலைகள் இன்றலவும் நிலவியே வருகிறது. இருப்பினும் மக்களின் உணர்வுகள் எதனையும் உணராத மத்திய மோடி அரசு தான் கொண்ட இந்துத்வ கொள்கைகளை திணிக்க பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி வருகிறது.

இப்படி இருக்கையில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு அதனை கொண்டாட திட்டமிட்டுள்ள பாஜக.

முஸ்லிம்களின் வாழ்வை குலைத்து காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம்: ஓராண்டு நிறைவை கொண்டாட  பாஜக திட்டம்!

அதற்காக வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க முடிவெடுத்து மாநில பாஜக தலைவர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அக்கட்சித் தலைமை கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்லாமியர்களின் நிம்மதியை அமைதியை குலைத்து அவர்களது வாழ்வாதாரத்தையும் அழித்து அதன் மூலம் குளிர்காண இருப்பது அப்பட்டமான எதேச்சதிகாரத்தின் உச்சம் என பல தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories