இந்தியா

சீனாவை பற்றி கேட்டால் ஏன் சீறுகிறீர்கள்? தேசத் துரோகம் என குதிக்கிறீர்கள்? - மோடி அரசை சாடிய ப.சிதம்பரம்!

ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் போது சீனாவின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தது பாஜகவுக்கு மறந்துவிட்டதா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீனாவை பற்றி கேட்டால் ஏன் சீறுகிறீர்கள்? தேசத் துரோகம் என குதிக்கிறீர்கள்? - மோடி அரசை சாடிய ப.சிதம்பரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவை பற்றி கேள்வி எழுப்பினால், மத்திய மோடி அரசு சீறுவது ஏன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், சீன துருப்புகள் இந்திய எல்லையைத் தாண்டி ஊடுருவியிருக்கிறார்களா? இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்திருக்கிறார்களா என்று கேட்டால் மத்திய அரசு தரப்பில் இருந்து சீறுகிறார்கள். அது ஏன்?

இதனை தேசத் துரோகம் என்று குதிக்கிறார்கள். ஏன் 2004-14 ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் போது இதேக் கேள்விகளை பா.ஜ.க பலமுறை கேட்டார்களே மறந்துவிட்டதா? அப்போது, சீனாவின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்களே அதுவும் மறந்துவிட்டதா என ப.சிதம்பரம் நினைவுக்கூர்ந்துள்ளார்.

சீனாவை பற்றி கேட்டால் ஏன் சீறுகிறீர்கள்? தேசத் துரோகம் என குதிக்கிறீர்கள்? - மோடி அரசை சாடிய ப.சிதம்பரம்!
Kamal Kishore

மேலும், சீனாவின் ஊடுருவல் நடந்தது. ஆனால் அது முறியடிக்கப்பட்டுவிட்டது என்றும், இந்திய நிலங்கள் அந்நாட்டால் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று அப்போதைய காங்கிரஸ் அரசு சார்பில் ஒவ்வொரு முறையும் பதிலளிக்கப்பட்டது என எடுத்துரைத்தார்.

ஆனால், இப்போது சீனா விவகாரம் குறித்து உண்டு, இல்லை என மோடி அரசால் ஏன் பதிலளிக்க முடியவில்லை? எனக் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம், மேலும் தகவல் தேவைப்பட்டால் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள ஆய்வச் செய்தியை படித்துப் பாருங்கள் என செய்தி இணைப்பை அவர் பகிர்ந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories