இந்தியா

“தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு நிலவுவதற்கு இதுவே சான்று” - கொந்தளித்த மு.க.ஸ்டாலின்!

“மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ரயில்வே பணிச்சேர்க்கை நடவடிக்கையை மறு ஆய்வு செய்து சமூக நீதியை உறுதிசெய்ய வேண்டும்.” என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு நிலவுவதற்கு இதுவே சான்று” - கொந்தளித்த மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தென்னக ரயில்வேயில் சரக்கு வண்டி பாதுகாவலர் பணிக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 13ம் தேதி வெளியாகின. அதில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 96 பேரில் 5 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 91 பேரும் வட இந்தியர்கள். இந்தத் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தென்னக ரயில்வேயில் 96 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், தமிழர்கள் வெறுமனே 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழர் விரோதப் போக்கிற்கு சான்றாக அமைவதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தென்னக ரயில்வேயில் சரக்கு வண்டி பாதுகாவலர் பணிக்கு தமிழகத்திலிருந்து 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழர்களுக்கு எதிரான பாகுபாட்டுக்கு இதுவே சான்று. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பணிச்சேர்க்கை நடவடிக்கையை மறு ஆய்வு செய்து சமூக நீதியை உறுதிசெய்ய வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories