இந்தியா

சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்தை திருடிய இளைஞர் - ஆந்திர போலிஸிடம் சிக்கிய பரிதாபம்!

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள பணிமனையில் இருந்து இளைஞர் ஒருவர் அரசு பேருந்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள தர்மவரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்து நிறுத்திவைக்கப்பட்ட பேருந்து ஒன்றை மர்ம நபர் திருடி சென்றதாக தர்மவரம் பணிமனை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது சிக்கப்பள்ளி போலிஸார் அனந்தபுரத்தில் செயல்பட்டுவரும் ஒரு கார் தொழிற்சாலைக்கு அருகில் பேருந்து செல்வதைக் கண்டு மடக்கி பிடித்தனர்.

பின்னர் பேருந்தில் ஓட்டி வந்த ஒருவரை கைது செய்து பேருந்தை பணிமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பேருந்தை திருடிய நபரிடம் நடைபெற்ற விசாரணையில் அவர், கர்நாடக மாநிலம் பெங்களூர் விஜயபுராவை சேர்ந்த முஜாமி கான் என தெரியவந்தது.

சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்தை திருடிய இளைஞர் - ஆந்திர போலிஸிடம் சிக்கிய பரிதாபம்!

மேலும் அவரிடன் நடந்தப்பட்ட விசாரணையில், முஜாமி கான் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக அனந்தப்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக திரும்ப தனது சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஊருக்குச் செல்வதாக உறவினர் வீட்டில் சொல்லிவிட்டு, தர்மவரம் வரை நடந்து வந்ததாகவும் அங்கு பணிமனையில் பேருந்து நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதில் சொந்த ஊருக்குச் செல்லலாம் என முடிவு எடுத்து பேருந்த எடுத்ததாக கூறியுள்ளார்.

அதிகாரிகள் அளித்தப் புகாரின் அடிப்படையில் தற்போது அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலிஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories