Corona Virus

சென்னையில் 4 மண்டலங்களில் 1000த்தை கடந்த கொரோனா பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையில் எடப்பாடி அரசு மெத்தனம்!

3 ஆயிரத்துக்கும் மேலானோர் சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருந்தாலும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருவது விபரீதத்தை விளைவிக்கும் என எச்சரிக்கைகள் எழுந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே கொரோனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே நேற்று வரையில் 9,364 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனாவின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்தே வருகிறது.

அதிலும், ராயபுரம் மண்டலத்தில் மட்டுமே இதுவரை 1768 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து, கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை ஆகிய 4 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.

அதேபோல, அம்பத்தூர், அடையாறு, வளசரவாக்கம், அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய 5 மண்டலங்களில் 400க்கு மேலான பாதிப்புகளை கொண்டுள்ளது.

சென்னையில் 4 மண்டலங்களில் 1000த்தை கடந்த கொரோனா பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையில்  எடப்பாடி அரசு மெத்தனம்!

இருப்பினும், 3,791 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால், 5 ஆயிரத்து 461 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள 98 கொரோனா உயிரிழப்புகளில் 66 பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

மே முதல் வாரங்களில் பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுக்கிறது. இதற்கு காரணமாக பரிசோதனைகள் குறைவாக இருப்பதாகவே குற்றஞ்சாட்டப்படுகிறது.

நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தினந்தோறும் 500 கணக்கில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் அ.தி.மு.க அரசோ, விபரீதத்தை அறிந்திருந்தும், பல்வேறு தளர்வுகளை அறிவித்து மக்கள் நடமாட்டத்தை அதிகரித்து வருகிறது.

சென்னையில் 4 மண்டலங்களில் 1000த்தை கடந்த கொரோனா பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையில்  எடப்பாடி அரசு மெத்தனம்!

இப்படியாக பரிசோதனைகளை அதிகரிக்காமல் மேன்மேலும் தளர்வுகளை அறிவித்து வந்தால், ஜூன் மாதம் மத்தியில் தமிழகத்தின் வூஹானாகவே சென்னை மாறும் சூழல் உருவாகும் என அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.

மெத்தனம் காட்டாமல், தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

banner

Related Stories

Related Stories