இந்தியா

“அது ஒரு அதி ஆபத்து நோய்க்கிருமி; கொரோனா சோதனை மையங்களிலேயே தொற்று ஏற்படும் அபாயம்” : எச்சரிக்கும் ICMR!

கொரோனா மாதிரிகள் அதிகரித்துவரும் வேலையில், அனுமதி வழங்கப்பட்ட ஆய்வு மையங்களுக்கு ஐ.சி.எம்.ஆர் சில வழிகாட்டும் நெரிமுறைகளை வழங்கியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அடுமட்டுமின்றி தற்போது அவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிக்கு அனுமதியை உயிரித் தொழில்நுட்பவியல் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில், அணுசக்தி துறை ஆகியவற்றின் பரிசோதனை மையங்களில் கொரோனா மாதிரிகளை (கோவிட்-19 சாம்பிள்) சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக, நாடு முழுவதும் 42,000 மாதிரிகளுக்கும் மேல் சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. 123 அரசுசார் பரிசோதனை நிலையங்களும், 49 தனியார் ஆய்வு சோதனை நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

“அது ஒரு அதி ஆபத்து நோய்க்கிருமி; கொரோனா சோதனை மையங்களிலேயே தொற்று ஏற்படும் அபாயம்” : எச்சரிக்கும் ICMR!

இந்நிலையில், தினசரி கொரோனா மாதிரிகள் அதிகரித்துவரும் வேலையில், அனுமதி வழங்கப்பட்ட ஆய்வு மையங்களுக்கு ஐ.சி.எம்.ஆர் சில வழிகாட்டும் நெரிமுறைகளை வழங்கியுள்ளது. ஆய்வு மையங்கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை அறிக்கையில், “கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் கோவிட் - 19 வைரஸ் ஒரு அதி ஆபத்து நோய்க்கிருமியாகும். அதனுடையை தொற்றுத் தன்மை அதிவேகத்தில் பரவக்கூடியது.

எனவே, கொரோனா மாதிரிகளை கையாளும் போது அதீத கவனம் தேவை. மேலும் அதிக பரிசோதனை மையங்களில் கையாள்வது; போதிய பயிற்சியில்லாத பணியாளர்களை வைத்து சோதனை செய்து போன்ற நிகழ்ச்சிகளினால் வைரஸ் வெளியில் பரவ வாய்ப்பு அதிகமுள்ளது. அதனால் சோதனை மையங்களிலேயே தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories