சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணி புரிந்து வந்த 3 முதுகலை அரசு பொது மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 46 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா நோயால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,378. குணடமடைந்தோர் எண்ணிக்கை 1992 என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,50,597
ஆக அதிகரிப்பு.
உலகளவில் 22,26,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 5,63,670 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்தது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
13,835 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,766 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .
- மத்திய சுகாதாரத்துறை தகவல்!
மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க தடை.
- அமைச்சர் தங்கமணி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10,815 ஆக உயர்ந்துள்ளது. உரியிழப்பு 353 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது.
- சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 51 பேர் உயிரிழப்பு. புதிதாக 905 பேருக்கு கொரோனா தொற்று. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,352 ஆக உயர்வு!
- மத்திய சுகாதாரத்துறை
டெல்லியில் புதிதாக 166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,069 ஆக அதிகரிப்பு.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் விமான நிறுவன ஊழியர் உயிரிழப்பு!
ஈரோட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. உலகளவில் இதுவரை கொரோனாவுக்கு 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85,362 ஆக அதிகரிப்பு. அமெரிக்காவில் 'கொரோனா' பலி 13 ஆயிரத்தைக் கடந்தது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு! இதுவரை அம்மாநிலத்தில் 361 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 1,135 பேருக்கு கொரோனா - 72 பேர் பலி!
தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78,110 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்குகிறது.
இந்தியாவில் புதிதாக 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் உயிரிழப்பு. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,789 ஆக அதிகரிப்பு.
- மத்திய சுகாதாரத்துறை
தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது.
- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்வு.
- சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,288 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,423 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 1,272,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 45,619 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் உயிரிழப்பு.
நாளை முதல் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மட்டும் எப்போதும் போல விற்பனை செய்யப்படும்.
- பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61,142-ஆக உயர்வு!
4,248 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டதில் 3,356 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
தமிழகத்தில் இன்று புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரிப்பு!
- சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநிலங்களுக்கு ரூ.11,092 பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் 62 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,547-ஆக உயர்வு!
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 6ம் தேதி ஒருநாள் மட்டும் ஆட்டிறைச்சி, கோழி, மீன் கடைகள் மூடப்படும்.
மற்ற நாட்களில் விற்பனையின்போது சமூக விலகலை பின்பற்றாமல் இருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.
- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55,163 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை
இத்தாலி - 13,915
ஸ்பெயின் - 10,935
அமெரிக்கா - 6,095
பிரான்ஸ் - 5,387
தமிழகத்தில் ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 411 பேருக்கு கொரோனா பாதிப்பு.
- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,166 ஆக உயர்ந்துள்ளது. அதேப்போல், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,014,499 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனாவால் 50,234 பேர் உயிரிழப்பு. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,80,519-ஆக உயர்வு.
இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற 182 பேர் உட்பட டெல்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 293 ஆக அதிகரிப்பு!
- டெல்லி அரசு தகவல்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 309.
இன்று மட்டும் 75 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று உறுதியானவர்களில் 264 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள்.
- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா குறித்து பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பிரபல பொழுதுபோக்கு செயலி நிறுவனமான டிக்-டாக், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு 4 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.100 கோடி.
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற திருவண்டார்கோயில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு.
- மாநில சுகாதாரத்துறை
டெல்லியில் புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த மருத்துவமனை தற்போது கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு பரவியிருந்த கொரோனா, மேலும் 4 மாவட்டங்களுக்கு பரவி 19ஆக உயர்ந்தது!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 386 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 1,637 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- உள்துறை அமைச்சகம் தகவல்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 124 பேர் குணமடைந்துள்ளனர். 1,238 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
- மத்திய சுகாதாரத்துறை தகவல்.
நெல்லையில் மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டது.
- மாவட்ட ஆட்சியர் தகவல்.
"தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் 1,131 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கலீல் பேரில் 515 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தி விட்டோம். மீதமுள்ள 616 பேரை தேடி வருகிறோம்!"
- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்தது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை நெருங்குகிறது.
17 வயது சிறுமி உட்பட 4 பேருக்கு ராஜஸ்தானில் புதிதாக கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 17 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் கொரோனா உயிரிழப்பு 34 ஆயிரத்தை நெருங்குகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,956 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் 10 ஆயிரத்து 779 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 97, 689 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, அமெரிக்காவில் 2,475 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாம் நிலையை கடந்து, சமூக தொற்று எனப்படும் அபாயகரமான 3ம் கட்டத்தை அடுத்த 5 முதல் 10 நாட்களில் இந்தியா சந்திக்கும்.
- நிதி ஆயோக்கின் சிறப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை நெருங்கியது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30,851 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,62,967 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1003 ஆக உயர்வு. இன்று ஒரே நாளில் 117 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தத்தம் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து நடந்து வந்து டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து முனையத்தில் குவிந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரிப்பு.
- சுகாதாரத்துறை தகவல்
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 69 வயது முதியவர் உயிரிழப்பு.
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர் பலி
கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தை உட்பட 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இந்த 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவில்லை என மருத்துவமனை தகவல்
உலகளவில் நேற்று 24 ,341 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,352 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளை முதல் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே செயல்படும்.
- தமிழக அரசு அறிவிப்பு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் 677 இந்தியர்கள், 47 வெளிநாட்டினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
கேரளாவில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 700-ஐ கடந்ததால் மக்கள் அச்சம்.
கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கட்டோரின் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றித்திரிந்த 2,535 பேரை அம்மாநில போலிஸ் கைது செய்துள்ளனர். அதேப்போல், 1,656 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 3,612 பேர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 100 பேரில் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 100 பேரின் இடது கைகளில் முத்திரை குத்தியதுடன் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி தொடர் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா நெகட்டிவ் உறுதி செய்யப்பட்டது. இன்னும் 2 நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
- அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்
ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 443 உயிரிழப்பு; இதுவரை 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் சீனாவை தாண்டியுள்ளது ஸ்பெயின்.
வெளிநாட்டிற்கு சென்று திரும்பிய 3 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அரசு உத்தரவை மீறி வெளியே சென்றதால் அவர்கள் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஒருவர் மீதும், கோயம்பேடு பகுதியில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தால் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் (Filpkart) சேவை தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரட்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளதை அடுத்து சேவை நிறுவத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது முதியவர் நேற்றைய தினம் உயிரிழந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 519 ஆக உயர்வு. 40 பேர் குணமடைந்துள்ளனர்.
- மத்திய அரசு.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஐ தாண்டியது. ஒட்டுமொத்தமாக 511 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
கொரோனா அச்சுறுத்தலால் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு குறித்த நேரத்திற்கு வருவதில் சிரமம் என்பதால் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணிநேரம் தாமதமாக துவங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 415 ஆக உயர்வு - மத்திய சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ தகவல்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள நகரங்களில் விதிகளை மக்கள் பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்
- பிரதமர் மோடி
கொரோனா வைரஸ் எதிரொலி : சென்னை,ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.
தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு. அத்தியாவசியப் பணிகள் தொடர்ந்து நடைபெற எந்தத் தடையும் இல்லை - தமிழக அரசு அறிவிப்பு
ஸ்பெயினில் இருந்து சென்னை வந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு. மும்பையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த 63 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 324 ஆக உயர்வு. இதில், 41 பேர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸால் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 793 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் அந்த நாட்டில் உயிரிழப்பு 4,825 ஆக அதிகரி்த்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் நேற்று ஒரேநாளில் 6,557 உயர்ந்து, 53,578 ஆக அதிகரித்துள்ளது.
அதேப்போல், பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் 1,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,459 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்
பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர், பங்கேற்ற லக்னோவில் உள்ள தாஜ் ஹோட்டல் மூடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் ஊரடங்கு உத்தரவை அடுத்து, நாளை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளது.
-மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 6,700க்கு மேற்பட்டோர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த 4 பேரும் 64 வயதுக்கு மேல் ஆனவர்கள் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
கேரளாவில் இருந்து வரும் அனைத்து விதமான வாகனங்களுக்கும் தடை விதிக்கபப்ட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 9 சோதனைச் சாவடிகளும் இன்று மாலை முதல் மூடப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195ல் இருந்து 206 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
துபாயில் இருந்து மதுரை வந்த 143 பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்காததால் காவல்துறையினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் பேருந்தின் மூலம் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகளும் பாயும் என காவல்துறை டி.ஜி.பி திரிபாதி எச்சரித்துள்ளார்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரு நாளைக்கு மூன்று முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்
ஏசி வசதிகள் கொண்ட நகை, ஜவுளி போன்ற பெரிய கடைகளை மூட வேண்டும். வாரச்சந்தைகளை மார்ச் 31 அரை மூட வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவது நலம்
ஈரோடு மாவட்டத்தில் மார்ச் 31ம் தேதி வரை மக்கள் அதிகம் கூடும் பெரிய மளிகை கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தவறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலால், தொற்று பாதிப்புள்ள அனைத்து இடங்களையும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
பிப்ரவரி 29ஆம் தேதி வரை 16 இடங்கள் மட்டுமே கண்காணிக்கப்பட்டன. அதன் பிறகு மார்ச் 15ம் தேதி வரை 51 இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
அந்த பகுதிகளில் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறி கொண்ட பொதுமக்கள் 826 பேரிடம் கொரோனா மாதிரி சோதனை செய்ததில் யாருக்கும் நோய் பாதிப்பு இல்லை என்று சோதனை முடிவுகள் தெரிவித்தன.
தற்போது வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், எங்கெங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்தோ அந்த ஊர்களை எல்லாம் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சத்தால் ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. நாளை முதல் வருகின்ற 31-ம் தேதி வரை நாடு முழுவதும் 168 ரயில்கள் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை அருகே வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞருக்கு கொரோனா இருப்பதாக வதந்தி பரப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குத்தாலம் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் லண்டனில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். இந்நிலையில் ஆனந்துக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்றும், அரசு மருத்துவமனையில் இருந்து அவர் தப்பி வந்ததாகவும் பொய் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது.
இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறையை சேர்ந்த கில்லி பிரகாஷ் என்பவர் இந்த செய்தியை பரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து அவரை தவறான தகவலை பரப்பி மக்களை அச்சப்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலிஸார் கைது செய்தனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது என இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ICMR) தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து, புதுச்சேரியில் மறு உத்தரவு வரும் வரை 250 திருமண மண்டபங்கள் மூடப்படுவதாக திருமண உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி வந்த பஞ்சாபைச் சேர்ந்த இளைஞருக்கு (35) கொரோனா அறிகுறி இருப்பது பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, சப்தர்ஜங் மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் நேற்று இரவு திடீரென மருத்துவமனையின் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!
விமானம் மற்றும் கப்பல் மூலம் வருபவர்களை தொடர்ந்து ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை சோதனை செய்ய வேண்டும். - தமிழக அரசு உத்தரவு!
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 151லிருந்து 166ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டமன்றக் கூட்டத்திற்கு வருகை தந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிருமிநாசினிகளை வழங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியை அடுத்து, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறி இருந்தால் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையில், ராகவேந்திரா என்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கி, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
மேலும், மாஸ்க், சானிடைசர் போன்றவற்றின் தட்டுப்பாட்டை நீக்கவேண்டும் என அரசுக்கும் வலியுறுத்தியுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயளுக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. லடாக்கில் உள்ள உள்ள ராணுவ வீரரரின் தந்தை கடந்த மாதம் ஈரானில் இருந்து நாடு திரும்பியதை அடுத்து இவருக்கும் கொரோனா தொற்று வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து, லடாக் ராணுவ வீரர்கள் முகாமில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த வீரர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 46 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, 16 உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூர், பஹ்ரைன், ஜெர்மன், செயிண்ட் டேனிஸ், தோஹா ஆகிய இடங்களில் இருந்து சென்னை வரும் தலா ஒரு விமானம், குவைத், மஸ்கட்டில் இருந்து சென்னை வரும் தலா 3 விமானங்கள், இலங்கையில் இருந்து 4 விமானங்கள், மலேசியாவில் இருந்து 6 விமானங்கள், துபாயில் இருந்து 2 விமானங்கள் என வந்து செல்லும் 46 சேவைகள் ரத்து.
உள்நாட்டு விமான சேவையை பொறுத்தவரை கொச்சி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், தூத்துக்குடி, திருச்சி, கோவா, புனே ஆகிய பகுதில் இருந்து வந்து செல்லும் 16 விமான சேவைகள் ரத்து.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தஞ்சை பெருவுடையார் கோவிலில் இருந்து பக்தர்களை வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவிட்டுள்ளார்.
மார்ச் 31ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி கிடையாது என ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் மற்றும் கிருமிநாசினிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு, பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் சவுதி அரேபியாவிற்குச் சென்று வந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜ.க எம்.பி சுரேஷ் பிரபு அடுத்த 14 நாட்களுக்கு அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுகிறார்.
மாஸ்க், கிருமிநாசினி, கையுறை போன்றவைப் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் அவற்றின் கையிருப்பு, உற்பத்தி விபரங்களை உடனடியாக தெரிவிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்படியாக மகாராஷ்டிர மாநிலத்தில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக கேரளாவில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் கட்டத்தை எட்டியதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அறிவிப்பு.
அடுத்த கட்டத்துக்கு இது பரவாமல் தடுக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிர்ச்சை எடுத்துக்கொள்ள வலியுறுத்தல்.
கொரோனா வைரஸ் எதிரொலி மதுரை விமானநிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு மும்பை செல்லும் விமானங்கள் ரத்து.
நீலகிரி - கொரோனா வைரஸ் கேரளாவில் வேகமாகப் பரவிவரும் நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கூடலூரில் இருந்து கேரளா மற்றும் கர்நாடாக செல்லும் அனைத்து தமிழக அரசு பேருந்துகளும் இன்று முதல் ரத்து. நீலகிரி எல்லைப்பகுதியான கீழ்நாடுகாணி, தாளூர் போன்ற எல்லை பகுதி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
கொரோனா பீதி காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் இழுத்து மூடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளையும் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனாவால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் முடங்கியுள்ளது.
அதேபோல, கொரோனாவால் ஐரோப்பிய நாடுகளில் ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் கரூரில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கு சரக்குகள் தேக்கமடைந்ததால் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலியாக, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தியாகராய நகர் பகுதியில் உள்ள பெரிய கடைகளை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள மூவாயிரத்துக்கும் மேலான ஏடிஎம் மையங்களை அவ்வப்போது சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டதோடு, பூங்காக்களை மூடவும் உத்தவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பதற்றம் நிலவும் நிலையில், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை ரூ.10ல் இருந்து 50 ரூபாயக உயர்த்தியுள்ளது ரயில்வே அமைச்சகம்.
மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட மும்பை, வதோதரா, அகமதாபாத், ரத்லாம், ராஜ்கோட், பவாநகர் உள்ளிட்ட 250 ரயில் நிலையங்களிலும் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை சென்னையில் உள்ள ரயில் நிலையங்களிமும், மத்திய ரயில்வேயில் உள்ள புசாவல், நாக்பூர், சோலாப்பூர், புனே ஆகிய மண்டலங்களிலும் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இருப்பினும், இது தற்காலிக நடவடிக்கையா அல்லது நிரந்தரமான கட்டண உயர்வா என்ற ஐயப்பாடு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த மூவர் நீங்கலாக இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பை அடுத்து சர்வதேச அளவில் வர்த்தகம் முடங்கியதால் தங்கம் விலை நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது.
இன்றைய தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.73 குறைந்து 3,870 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.30,960 ஆக உள்ளது.
வெகுநாட்களுக்கு பிறகு 31 ஆயிரத்துக்கும் கீழ் ஒரு சவரன் தங்கம் விற்கபடும் வேளையில், கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு பவுனுக்கு ரூ.2,696 குறைந்துள்ளது.
அதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.1.80 காசுகள் குறைந்த 39 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 39 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதையொட்டி, மார்ச் 31ம் தேதி வரை உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் மூடப்படும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேபோல, புதுச்சேரியில் உள்ள சர்வதேச நகரமாக கருதப்படும் ஆரோவில் சுற்றுலா மையம், கல்லிக்கூடம் ஆகிய மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாத்தூர் மந்திர், கலாசார கூடங்களும் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், தமிழகத்திலும் பரவலாம் என்ற அச்சம் காரணமாக நாளை (மார்ச் 18) முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் சங்கங்களின் கோரிக்கையை அடுத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மூத்த நீதிபதிகளுடன் கலந்தாலோசித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
"கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் 'தயார் நிலை'க்கான மருத்துவ வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்.” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் பட நடிகர் இட்ரிஸ் எல்பாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து ட்விட்டரில் பதிவிட்டதோடு, வைரஸ் தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்வது குறித்தும் விளக்கியுள்ளார்.
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பிரபல இயக்குநர் சி.எஸ்.அமுதன், விஜய்யின் குட்டி ஸ்டோரி பாணியில் ட்விட்டரில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) அலுவலகம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ளது. ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் புனே மற்றும் நாக்பூர் ஆகிய மாவட்டங்களில் பொது இடங்களில் மக்கல் கூடுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளை காண, பார்வையாளர்களுக்கு இரண்டு வார காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி சிறைக்கைதிகளை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபடியாக மகாராஷ்டிர மாநிலத்தில் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக கேரளாவில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் மேலும் 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு. நொய்டா பகுதியில் வசிக்கும் இவர்களுக்கு இன்று காலை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் வைரஸ் பாதிப்பு 7 ஆக உயர்வு. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களை மூடினால் கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து தப்பிக்கலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் சாலையோர உணவகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.