இந்தியா

Coffee Day வங்கிக் கணக்கில் இருந்து மாயமான ரூ.2,000 கோடி.. சித்தார்த்தாவின் தற்கொலையில் தொடரும் மர்மம்!

கஃபே காஃபி டே நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 2,000 கோடி ரூபாய் மாயமானது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது அதன் விசாரணை வாரியம்.

Coffee Day வங்கிக் கணக்கில் இருந்து மாயமான ரூ.2,000 கோடி.. சித்தார்த்தாவின் தற்கொலையில் தொடரும் மர்மம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நூறாண்டுகளுக்கும் மேலாக காஃபி கொட்டை உற்பத்தி மற்றும் காஃபி தொடர்பான தொழிலைச் செய்துவரும் குடும்பத்தில் இருந்து வந்த வி.ஜி.சித்தார்த்தா, மேல்தட்டு, நடுத்தர வர்க்க இளைஞர்களை கவரும் வகையில் ஆடம்பரமான கஃபே காஃபி டே நிறுவனத்தை நிறுவினார்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சரின் மருமகனான வி.ஜி.சித்தார்த்தா சிக்மங்களூருவைச் சேர்ந்தவர். பங்குச் சந்தை தரகு நிறுவனத்தில் தொழிலாளராக தொடர்ந்த தனது வாழ்க்கையை, சிவன் செக்யூரிட்டிஸ், அமால்கமேட் காஃபி பீன், கஃபே காபி டே, சிக்கால் லாஜிஸ்டிக்ஸ், டாங்ளின் டெவலப்மென்ட், ஹோட்டல், ரெசார்ட் என பல்வேறு முன்னணி தொழில்களைத் தொடங்கி திறம்பட நடத்தி வந்தார்.

Coffee Day வங்கிக் கணக்கில் இருந்து மாயமான ரூ.2,000 கோடி.. சித்தார்த்தாவின் தற்கொலையில் தொடரும் மர்மம்!

2016ம் ஆண்டு மோடி அரசு அறிவித்த பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு சித்தார்த்தா பல்வேறு இடங்களில் வாங்கிய கடனால் மிகப்பெரிய மன அழுத்தத்துக்கு ஆளாகினார். அதன் பிறகு 2019ம் ஆண்டில் தனது தொழில்களில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சித்தார்த்தா 2019ம் ஆண்டு ஜூலை மாதம் மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் விழுந்து உயிரை விட்டார். இது நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சித்தார்த்தாவின் காஃபி டே நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 2,000 கோடி ரூபாய் பணம் மாயமாகியுள்ளது அந்நிறுவனத்தின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அந்த வாரியம் 100 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படியே இந்த 2,000 கோடி ரூபாய் மாயமானது தெரியவந்துள்ளது. மேலும், இந்த அறிக்கை முதற்கட்டமாகவே வெளியிடப்பட்டுள்ளது என்றும், விசாரணை முடிந்த பிறகும் வெளியிடப்படும் அறிக்கையில் அதன் மதிப்பு அதிகமாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்த விசாரணையின் மூலம் சித்தார்த்தாவின் மரணத்துக்கு பின்னணியில் இருக்கும் மர்மமும் புலப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும், சித்தார்த்தாவின் மறைவுக்குப் பின்னர் காஃபி டே நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்துள்ளது. தற்போது வங்கிக்கணக்கில் இருந்து பல பில்லியன் தொகையும் மாயமாகியுள்ளதால் காஃபி டே நிறுவனத்தை நடத்துவதற்கான அன்றாட செலவுக்கே பணமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories