இந்தியா

“ஒரு தொழிலதிபராக நான் தோற்றுவிட்டேன்” : கர்நாடக முன்னாள் முதல்வரின் மருமகன் கண்ணீர் கடிதம்

முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா காணாமல் போய் உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஒரு தொழிலதிபராக நான் தோற்றுவிட்டேன்” : கர்நாடக முன்னாள் முதல்வரின் மருமகன் கண்ணீர் கடிதம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், கஃபே காபி டே உரிமையாளருமான வி.ஜி.சித்தார்த்தா காணாமல் போய் உள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா எனும் சந்தேகத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சரின் மருமகனான வி.ஜி.சித்தார்த்தா சிக்மங்களூருவைச் சேர்ந்தவர். பங்கு சந்தை தரகு நிறுவனத்தில் தொழிலாளராக தொடர்ந்த தனது வாழ்க்கையை, சிவன் செக்யூரிட்டிஸ், அமால்கமேட் காஃபி பீன், கஃபே காபி டே, சிக்கால் லாஜிஸ்டிக்ஸ், டாங்ளின் டெவலெப்மெண்ட், ஹோட்டல், ரெசார்ட் என பல்வேறு முன்னணி தொழில்களைத் தொடங்கி திறம்பட நடத்தி வந்தார்.

1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட சித்தார்த்தாவின் கஃபே காபி டே, இந்தியாவில் மட்டுமில்லாமல் செக் குடியரசு, நேபாளம், வியன்னா, எகிப்து, மலேசியா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

“ஒரு தொழிலதிபராக நான் தோற்றுவிட்டேன்” : கர்நாடக முன்னாள் முதல்வரின் மருமகன் கண்ணீர் கடிதம்

சமீபத்தில் தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான சித்தார்த்தா, கடந்த சில நாட்களாக பெரும் மன உளைச்சலில் இருந்தார் என்று சொல்லப்பட்டுகிறது.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று மங்களூருவுக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, உல்லால் என்ற பகுதியில் உள்ள நேத்ராவதி ஆற்று பாலத்தில் ஓட்டுநரிடம் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு போனில் யாருடனோ பேசி உள்ளார்.

மீண்டும் அவர் காருக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த கார் டிரைவர், அவரை தேடியுள்ளார். அவரைக் காணாததால், பதற்றமடைந்த கார் டிரைவர் சித்தார்த்தாவின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்ததை அடுத்து, அவர்கள் போலிஸ் மூலம் சித்தார்த்தாவை தேடும் பணியின் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், தனது கஃபே காபி டே நிறுவன இயக்குநர்களுக்கும், ஊழியர்களுக்கும் சித்தார்த்தா எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில், “37 ஆண்டுகள் ஆகியும், பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியும் என்னால் லாபகரமானதாக கையாள முடியவில்லை. என் மீது நம்பிக்கை கொண்டிருந்த உங்கள் அனைவரையும் கைவிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

“ஒரு தொழிலதிபராக நான் தோற்றுவிட்டேன்” : கர்நாடக முன்னாள் முதல்வரின் மருமகன் கண்ணீர் கடிதம்

6 மாதங்களுக்கு முன்பு வர்த்தகத்திற்காக பெரும் தொகையை கடனாக பெற்று பங்குகளை விற்றேன். ஆனால் அதனை வாங்கிய நபர் தற்போது திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு நெருக்கடி தருவதால் முற்றிலும் முடங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். எனவே தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு முழுக்க முழுக்க நான் மட்டுமே காரணம். இனி என்னால் போராட முடியவில்லை.

ஒரு தொழில்முனைவோராகவும், தொழிலதிபராகவும் நான் தோல்வியடைந்துவிட்டேன். எனக்கு இருக்கும் கடனை விட சொத்துகள் அதிகம் என்பதால், எவருக்கெல்லாம் கடன் பாக்கி உள்ளதோ அதனை திருப்பி செலுத்திவிடுங்கள் என்றும் அந்த கடிதத்தில் சித்தார்த்தா உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு தொழிலதிபராக நான் தோற்றுவிட்டேன்” : கர்நாடக முன்னாள் முதல்வரின் மருமகன் கண்ணீர் கடிதம்

இதனையடுத்து, நேத்ரவதி ஆற்றுப் பாலத்தில் இறங்கி பேசிக்கொண்டிருந்த சித்தார்த்தா திடீரென காணாமல் போனதை அடுத்து அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா என்ற கோணத்தில் தேடுதல் வேட்டையில் கர்நாடக போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories