இந்தியா

பாதிப்பு 107, அறிகுறி 4000 : இந்தியாவில் கொரோனா - சமாளிக்க முடியாமல் திணறுகிறதா மோடி அரசு ?

மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது அம்மாநில மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

சீனாவில் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி தங்கள் மக்களை பாதுகாத்து வருகின்றன.

இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவது நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இன்று வரை 107 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 31 பேருக்கும், கேரளாவில் 22 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 14 பேரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். அதேபோல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு 107, அறிகுறி 4000 : இந்தியாவில் கொரோனா - சமாளிக்க முடியாமல் திணறுகிறதா மோடி அரசு ?

இந்த வைரஸ் பாதிப்பால், கர்நாடகா மாநிலம், கல்புர்கியில் 76 வயது முதியவர் ஒருவர் பலியான நிலையில், நேற்று முன்தினம் டெல்லியை சேர்ந்த 68 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய தனது மகன் மூலமாக அந்த மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால், இந்தியாவில் உயிரிழப்பு 2 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் பாதித்தவர்களுடன் பழகிய 4,000 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கும் நோய் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுகாதாரத்துறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒருவேளை வைரஸை எதிர்கொள்ளும் அளவிற்கு மோடி அரசிடம் திட்டங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லையா என்ற கேள்வியும், சந்தேகமும் பரவலாக எழத் தொடங்கி உள்ளது.

banner

Related Stories

Related Stories