இந்தியா

“மனைவியை விட்டு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு” - பா.ஜ.க நிர்வாகி மீது மனைவி புகார்!

மனைவியை விட்டு, வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்த பா.ஜ.க நிர்வாகியை கையும் களவுமாகப் பிடித்து போலிஸிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மனைவியை விட்டு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு” - பா.ஜ.க நிர்வாகி மீது மனைவி புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் பா.ஜ.கவின் விவசாய அணியான கிசான் மோர்ச்சாவின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராக இருப்பவர் ஸ்ரீகாந்த். இவருக்கு அனு என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபகாலமாக வீட்டுக்கு சரியாக வராமல், அலுவலகப் பணி என வெளியில் ஸ்ரீகாந்த் தங்கியுள்ளார். கணவரின் இந்த தொடர் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த அனு தொடர்ச்சியாக ஸ்ரீகாந்த்தை கண்காணித்து வந்துள்ளார்.

அதில், ஸ்ரீகாந்த் சமூக ஆர்லராக இருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி ஸ்ரீகாந்த்தை பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது அவர் அந்தப் பெண்ணுடன் வேறு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

“மனைவியை விட்டு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு” - பா.ஜ.க நிர்வாகி மீது மனைவி புகார்!

அப்போது அனு அந்த குடியிருப்புக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அனு, இதுகுறித்து போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை பா.ஜ.க நிர்வாகிகள் எதுவும் பேசாமல் இருக்கும் நிலையில் அவர்களிடம் இதுகுறித்து அனு பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories