இந்தியா

CAA-வுக்கு எதிராக சண்டை செய்யும் கேரளா : 70 லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட மனிதச் சங்கிலி போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலத்தில் 620 கி.மீ தொலைவு 70 லட்சம் மக்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

CAA-வுக்கு எதிராக சண்டை செய்யும் கேரளா : 70 லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட மனிதச் சங்கிலி போராட்டம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக உள்ளதாக கூறி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டில் முதன்முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதோடு, இது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது எனக் கூறி கேரளா, மேற்குவங்கம் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டிலே முதன்முறையாக சட்டப்பேரவையில் கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அத்தோடு விட்டுவிடாமல் குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க கோரி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு அளித்துள்ளது.

இப்படி தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கும் கேரளா, தற்போது சிஏஏ-விற்கு எதிராக மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் உருவாக்கப்பட்ட இந்த மனிதச் சங்கிலி போராட்டம், வடக்கு கேரளாவின் காசர்கோடு நகரில் தொடங்கி, தெற்கே களியக்காவிளை வரை உருவாக்கப்பட்டது.

சுமார் 620 கி.மீ தூரத்துக்கு நடைபெற்ற மனிதச் சங்கிலியில் ஏறக்குறைய 60 லட்சம் முதல் 70 லட்சம் கேரள மக்கள் பங்கேற்றுள்ளனர். மனித சங்கிலியின் போது கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

புதுமண தம்பதியினர், மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

banner

Related Stories

Related Stories