இந்தியா

“அதீத வரி, அரசு இழைக்கும் சமூக அநீதி” : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே பேச்சு!

மக்கள் மீது அதிகமாக வரிகளை சுமத்துவது அரசு இழைக்கும் சமூக அநீதி என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டதன் 79வது ஆண்டு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “நாட்டின் வளங்கள் பரவலாவதில் வரித் துறை தீர்ப்பாயங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. தீர்ப்பாயங்களில் விரைவாக கிடைக்கும் தீர்ப்பினால் வரி செலுத்துவோர் பயனடைகின்றனர்.

வரி ஏய்ப்பு என்பது நாட்டு மக்களுக்கு செய்யும் அநீதி, நியாயமற்ற அதீத வரி விதிப்பு, அரசே மக்களுக்குச் செய்யும் சமூக அநீதி”

மேலும், இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மையும், விலைவாசி உயர்வும் ஒரு பொருளாதார அவசரநிலையை ஏற்படுத்தி வருகிறது” என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, விமர்சித்தார்.

இன்னும் ஒரு சில நாட்களில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதீத வரி விதிப்பு குறித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

banner

Related Stories

Related Stories