இந்தியா

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரகளை : 100க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறை!

புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொது சென்னையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்களின் வாகனங்களை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரகளை : 100க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும், வாகனங்களில் வேகமாக செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படுவதோடு, உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க இந்தாண்டு நகர்ப்பகுதிகளில் அதிகப்படியான போலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி விபத்துகளைத் தவிர்க்க திட்டமிட்டனர். அதன்படி இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் சென்னை முழுவதும் எல்.இ.டி விளக்குகளை பொருத்தியும், தடுப்பு பலகை அமைத்தும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிவேகமாகச் சென்றவர்களை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அதிக ஒலி எழுப்பும்படியான இருசக்கர வாகனங்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். சென்னை முழுவதும் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்ட இளைஞர்களையும் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories