இந்தியா

“2020ம் ஆண்டின் முதல் போராட்டம்” : தேசிய கீதத்துடன் புத்தாண்டு கொண்டாடி #CAA-க்கு எதிர்ப்பு! - Video

புத்தாண்டை வரவேற்று ஒருபுறம் கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியிலும், தமிழகத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

“2020ம் ஆண்டின் முதல் போராட்டம்” : தேசிய கீதத்துடன் புத்தாண்டு கொண்டாடி #CAA-க்கு எதிர்ப்பு! - Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நாடுமுழுவதும் பற்றி எரிந்து வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்திற்கு எதிராக அனைத்து மதத்தினரும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நாடுமுழுவதும் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது டெல்லியிலும், சென்னையிலும் புத்தாண்டு கொண்டாட்த்தை போராட்டக் களமாக மாற்றியுள்ளனர்.

நேற்றைய தினம் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அதில், ஜாமியா பல்கலைக்கழகம் அருகில் உள்ள ஷகீன் பாக் பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாத மக்கள், புத்தாண்டு ஆரம்பிக்கும் போது தேசிய கீதம் பாடி புதிய ஆண்டை வரவேற்றனர். மேலும், எல்லோரும் ஆசாதி முழக்கங்களை எழுப்பி குடியுரிமை உரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர். இந்த போராட்டத்தின் போது டெல்லியில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சென்னையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் சைதாப்பேட்டையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து, சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு போராட்டத்தை நடத்தினார்கள்.

அந்தப் போராட்டத்தின் போது, கைகளில் தேசியக் கொடி, மெழுகுவர்த்தி மற்றும் பதாகைகள் ஏந்தி, புத்தாண்டு நள்ளிரவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். புதிய ஆண்டிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories