இந்தியா

முப்படைகளுக்கு ஒரே தளபதி? - அதிகாரத்தை ஒற்றைப் புள்ளியில் குவிக்கும் மோடியின் திட்டம் என்ன?

முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பொறுப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முப்படைகளுக்கு ஒரே தளபதி? - அதிகாரத்தை ஒற்றைப் புள்ளியில் குவிக்கும் மோடியின் திட்டம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்தில், பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேசிய மக்கட்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய மக்கட்தொகை கணக்கெடுப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்றும், கணக்கெடுப்புக்கு எந்தவித ஆவணங்களோ, பயோமெட்ரிக் பதிவோ தேவை இல்லை என்றும் இந்தப் பணிகள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

முப்படைகளுக்கு ஒரே தளபதி? - அதிகாரத்தை ஒற்றைப் புள்ளியில் குவிக்கும் மோடியின் திட்டம் என்ன?

அதேபோல், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதி நியமிக்கவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அதன்படி, பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் ராணுவ விவகாரங்களுக்கென தனித்துறை உருவாக்கப்பட உள்ளது என்றும் முப்படைகளுக்கும் நியமிக்கப்படும் தலைமை தளபதி, ராணுவ விவகாரங்கள் துறைக்கான தலைவராகவும் செயல்படுவார் என்றும் கூறினார். இதனையடுத்து, முப்படை தலைமை தளபதி பதவிக்கு, தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பேசிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரியத்தை மறுசீரமைப்பு செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், மறுசீரமைப்பு செய்யப்படும் ரயில்வே வாரியத்தில் ஒரு தலைவர், 4 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

முப்படைகளுக்கும் ஒரே தளபதி நியமிக்கப்பட்டால், அது அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்கும் என்றும், சர்வாதிகார ஆட்சியை நோக்கி நாட்டை நகர்த்த பா.ஜ.க முயற்சி செய்வதாகவும் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories