இந்தியா

’பா.ஜ.க அரசை சார்ந்து வாழும் அ.தி.மு.க’ : சுய சிந்தனை இல்லாதவர்கள் என ப.சிதம்பரம் தாக்கு !

எந்த பிரச்னையிலும் பா.ஜ.க எடுக்கும் முடிவே அ.தி.மு.க.,வின் நிலைப்பாடாக உள்ளது என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

’பா.ஜ.க அரசை சார்ந்து வாழும் அ.தி.மு.க’ : சுய சிந்தனை இல்லாதவர்கள் என ப.சிதம்பரம் தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தி.மு.கவின் மாபெரும் பேரணியில் பங்கேற்றதற்கு பிறகு சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

அப்போது, “ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அம்மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்நேரத்தில் இந்த வெற்றி மிகவும் முக்கியத்துவமானது.

எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக திரண்டால் பா.ஜ.க.,வை எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தோற்கடிக்க முடியும். குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தியிருப்பதின் மூலம் இந்தியாவின் அடிப்படைக்கே சவால் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களில் மக்களை பிளவுபடுத்தக் கூடிய செயல்களை மட்டுமே பா.ஜ.க அரசு செய்து வருகிறது. மக்களுக்கான திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை.

எந்த விவகாரத்திலும், பிரச்னையிலும் அ.திமுகவிற்கு என தனி நிலைப்பாடு கிடையாது. பாஜகவின் நிலைப்பாடே அதிமுகவின் நிலைப்பாடு.ல் எடுத்துள்ளது.

எந்த விவகாரத்திலும், பிரச்னையிலும் அ.தி.மு.கவிற்கு என தனி நிலைப்பாடு கிடையாது. பா.ஜ.கவின் நிலைப்பாடே அ.தி.மு.கவின் நிலைப்பாடு.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை பற்றி சிந்திக்கவே இல்லையென பிரதமர் கூறுகிறார். ஆனால், பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவோம் என அமித்ஷா கூறுகிறார். ஆனால் பிரதமரோ நாங்கள் அப்படி சொல்லவே இல்லை என கூறியுள்ளார்.

இந்தியாவை ஜெர்மனியாக்கும் பா.ஜ.கவின் செயலுக்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றாக திரள்வது மகிழ்ச்சியளிக்கிறது. பிரதமர் மோடி இறங்கி வரும் வரை இதேபோல தொடர்ந்து போராட்டங்கள் நடக்கும்.

குடியுரிமை சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு சட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என அனைத்து கட்சிகளையும் அழைத்து மத்திய அரசு பேச வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

banner

Related Stories

Related Stories