இந்தியா

வெளிமாநிலத்தவர்கள் உள்ளே வரும் போது அரசிடம் பதிவு செய்ய வேண்டும் - மேகாலயா அரசு புதிய சட்டம்!

வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மேகாலயா மாநிலத்தில் தங்கினால், அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

வெளிமாநிலத்தவர்கள் உள்ளே வரும் போது அரசிடம் பதிவு செய்ய வேண்டும் - மேகாலயா அரசு புதிய சட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவுக்கு சில சிறப்பு அந்தஸ்துகள் உள்ளன. சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து. இதேபோல மேகாலயாவிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மேகாலயா மாநிலத்தில் தங்கினால், அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசர சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. தேசிய மக்கள் கட்சி தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணி அரசு இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசர சட்டம் உடனே அமலுக்கு வந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

வெளிமாநிலத்தவர்கள் உள்ளே வரும் போது அரசிடம் பதிவு செய்ய வேண்டும் - மேகாலயா அரசு புதிய சட்டம்!

இதுகுறித்து மேகாலயா துணை முதல்வர் பிரஸ்டன் டின்சோங் கூறுகையில், "மேகாலயாவில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தங்க விரும்பும் எந்தவொரு நபரும் அதுகுறித்த தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும். இது அவர்களின் சொந்த நலனுக்காகவும், அரசாங்கத்தின் நலனுக்காகவும் செய்யப்படுகிறது. தகவல்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்”என கூறினார்.

ஒருவேளை சட்டத்தை மீறினால், ஐ.பி.சி 176 அல்லது 177 பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்த சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories