இந்தியா

தொடர் இறக்கத்தில் இந்தியப் பங்குச்சந்தை : பொருளாதாரச் சரிவால் முதலீட்டாளர்கள் பெரும் கவலை !

மூன்று நாள் தொடர் விடுமுறைக்கு பின்னர் நேற்று துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

தொடர் இறக்கத்தில் இந்தியப் பங்குச்சந்தை : பொருளாதாரச் சரிவால் முதலீட்டாளர்கள் பெரும் கவலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது தொடங்கி, இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக மிகப்பெரும் தோல்வியைக் கண்டுள்ளதாகப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் இருக்கிறது. மூன்று நாள் தொடர் விடுமுறைக்கு பின்னர் நேற்று துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் மேலும் கடும் சரிவை சந்தித்தன.

தொடர் இறக்கத்தில் இந்தியப் பங்குச்சந்தை : பொருளாதாரச் சரிவால் முதலீட்டாளர்கள் பெரும் கவலை !

நேற்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 403.87 புள்ளிகள் சரிந்து 36,928.92 ஆகவும், தேசியப் பங்குச்சந்தையின் நிப்டி 124.85 புள்ளிகள் சரிந்து 10,898.40ஆகவும் வர்த்தகமாகின.

இந்நிலையில், வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 769.88 புள்ளிகள் சரிந்து 36,562.91 ஆகவும், நிப்டி 225.35 புள்ளிகள் சரிந்து 10,797.90 ஆகவும் முடிந்தன. ஒரே நாளில் இதுபோல சரிவு அடிக்கடி நிகழ்வதாக பங்கு சந்தை முதலீட்டாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஆட்டோமொபைல் உள்ளிட்ட நாட்டின் முக்கிய துறைகள் கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாலும், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் சரிந்து இருப்பதாலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

மேலும் ரூபாயின் மதிப்பும் கடும் சரிவை சந்தித்ததால் நேற்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்துள்ளன. இன்றும் இதே நிலை தொடர்ந்தால், முதலீட்டாளர்கள் அதிக அளவில் வெளியேற நேரிடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories