இந்தியா

“பா.ஜ.கவினர் பலாத்காரம் செஞ்சா கேள்வி கேட்காதீங்க” : ராகுல் காந்தி காட்டம்! 

பாலியல் கொடுமை செய்ததாக புகாரளித்த உன்னாவோ பெண்ணை கொல்ல முயற்சித்ததாக பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

“பா.ஜ.கவினர் பலாத்காரம் செஞ்சா கேள்வி கேட்காதீங்க” : ராகுல் காந்தி காட்டம்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தில் பாலியல் புகாரளித்த பெண்ணை லாரி ஏற்றி கொல்ல முயற்சித்ததாக பா.ஜ.க. எம்.எல்.ஏ மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் உன்னாவோ பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக சாட்சியம் அளிப்பதற்காக காவல் நிலையம் சென்ற அப்பெண்ணின் தந்தையும் அவருக்கு நெருக்கமானவர் ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

“பா.ஜ.கவினர் பலாத்காரம் செஞ்சா கேள்வி கேட்காதீங்க” : ராகுல் காந்தி காட்டம்! 

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், பாலியல் புகாரளித்த பெண் நேற்று முன்தினம் தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ரேபரேலி நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்த போது அசுர வேகத்தில் வந்த லாரி மோதியதில் விபத்துக்குள்ளாகினர்.

இதில் அப்பெண்ணின் தாயும், உறவினரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். புகார் கூறிய பெண்ணுக்கும், வழக்கறிஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. கொலை செய்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்து என்று அம்மாநிலத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொடநாடு கொள்ளை, கொலை விவகாரம் போன்று சம்மந்தப்பட்டவரின் குடும்பத்தினர் அடுத்தடுத்து விபத்துகளின் மூலம் கொல்லப்பட்டு வருகின்றனர் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

“பா.ஜ.கவினர் பலாத்காரம் செஞ்சா கேள்வி கேட்காதீங்க” : ராகுல் காந்தி காட்டம்! 

இதற்கிடையில், உன்னாவொ பெண்ணுக்கு ஆதரவாகவும், பா.ஜ.க எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவையிலும் இது தொடர்பாக விவாதிக்க முற்பட்டனர்.

இதனையடுத்து, இயற்கையாக நடந்த விபத்து என கூறிவந்த உத்தர பிரதேச காவல்துறையினர், பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் உட்பட 10 பேர் மீது கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.கவினர் கொலை செய்தால் யாரும் கேள்வி கேட்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என காட்டமாக விமர்சித்துள்ளார். பெண் கல்வி, பெண் குழந்தை பாதுகாப்பு என்ற திட்டத்தை பா.ஜ.க செயல்படுத்தி வருகிறது. ஆனால், நாட்டில் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. பா.ஜ.க. எம்.எல்.ஏ பாலியல் பலாத்காரம் செய்தால் அதனை எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள் என ராகுல்காந்தி காட்டமாகச் சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories