இந்தியா

'ஒரு நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி.

'ஒரு நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

17வது மக்களவை முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கிறது. பாஜக தலைமையிலான அரசு 2வது முறை பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது.

இந்த நிலையில், வருகிற ஜூன் 19ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ’ஒரு நாடு ஒரே தேர்தல்’ என்பதை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இதற்காக நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் அனுப்பியுள்ளார்.

 சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம்
சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம்

அதில், ஒரு நாடு ஒரே தேர்தல் மட்டுமில்லாமல், நாட்டின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நாடுமுழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடுவது குறித்தும், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை ஆலோசிக்க அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் கூடவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories