இந்தியா

நிர்மலாவுக்கு நிதி, அமித்ஷாவுக்கு உள்துறை : வெளியானது அமைச்சரவை இலாகா பட்டியல் !

பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்மலாவுக்கு நிதி, அமித்ஷாவுக்கு உள்துறை : வெளியானது அமைச்சரவை இலாகா பட்டியல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதில், புதிய அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. குறிப்பாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்.

மேலும், முந்தைய மோடி அமைச்சரவையில் இடம்பெற்ற அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகிய இருவரும் புதிய அமைச்சரவையில் இடம்பெறாததை அடுத்து அமைச்சர்களின் இலாகாக்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

அதில், கடந்த முறை உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், ரவிசங்கர் பிரசாத்துக்கு சட்டத் துறையும், கட்கரிக்கு போக்குவரத்துத் துறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்த மேலதிக விவரங்களை வெளியிட்டுள்ளது குடியரசுத் தலைவர் மாளிகை:

நரேந்திர மோடி: பிரதம அமைச்சர், விண்வெளித்துறை, அணுசக்தி துறை, தொழிலாளர் நலன், மக்கள் குறைத்தீர்ப்பு, முக்கிய கொள்கை முடிவுகள் மற்றும் பென்சன் துறை

அமித் ஷா: உள்துறை அமைச்சர்

ராஜ்நாத் சிங்: பாதுகாப்புத்துறை அமைச்சர்

நிதின் கட்கரி: சாலை போக்குவரத்துறை மற்றும் சிறு, குறு தொழில்துறை

சதானந்த கவுடா: ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர்

நிர்மலா சீதாராமன்: நிதித்துறை அமைச்சர்

ராம்விலாஸ் பஸ்வான்: நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர்

நரேந்திர சிங் தோமர்: விவசாய நலத்துறை அமைச்சர்

ரவிசங்கர் பிரசாத்: சட்டத்துறை அமைச்சர்

அர்சிம்ராத் கவுர் படால்: உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்

ஜெய்சங்கர்: வெளியுறவுத்துறை அமைச்சர்

ரமேஷ் நிஷாங்க் பொக்ரியல்: மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்

தாவர் சந்த் கெலோட்: சமூக நீதித்துறை அமைச்சர்

அர்ஜூன் முண்டா: பழங்குடியினர் அமைச்சர்

ஸ்மிருதி இரானி: ஜவுளித்துறை அமைச்சர்

ஹர்ஷ் வர்தன்: சுகாதாரத்துறை அமைச்சர்

பிரகாஷ் ஜவடேகர்: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்

பியூஷ் கோயல்: ரயில்வே துறை அமைச்சர்

தர்மேந்திர பிரதான்: பெட்ரோலியத்துறை அமைச்சர்

முக்தார் அப்பாஸ் நக்வி: சிறுபான்மையினத் துறை அமைச்சர்

பிரக்லாத் ஜோஷி: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்

மகேந்திரநாத் பாண்டே: தொழில் முனைவோர் மற்றும் திறன் அபிவிருத்தித்துறை அமைச்சர்

அர்விந்த் சவாந்த்: கனரக மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர்

கிரிராஜ் சிங்: விலங்குகள் நலத்துறை அமைச்சர்

கஜேந்திர சிங் ஷேக்வாத்: ஜல் சக்தி அமைச்சர்

நிர்மலாவுக்கு நிதி, அமித்ஷாவுக்கு உள்துறை : வெளியானது அமைச்சரவை இலாகா பட்டியல் !
நிர்மலாவுக்கு நிதி, அமித்ஷாவுக்கு உள்துறை : வெளியானது அமைச்சரவை இலாகா பட்டியல் !
நிர்மலாவுக்கு நிதி, அமித்ஷாவுக்கு உள்துறை : வெளியானது அமைச்சரவை இலாகா பட்டியல் !
நிர்மலாவுக்கு நிதி, அமித்ஷாவுக்கு உள்துறை : வெளியானது அமைச்சரவை இலாகா பட்டியல் !
நிர்மலாவுக்கு நிதி, அமித்ஷாவுக்கு உள்துறை : வெளியானது அமைச்சரவை இலாகா பட்டியல் !
நிர்மலாவுக்கு நிதி, அமித்ஷாவுக்கு உள்துறை : வெளியானது அமைச்சரவை இலாகா பட்டியல் !
நிர்மலாவுக்கு நிதி, அமித்ஷாவுக்கு உள்துறை : வெளியானது அமைச்சரவை இலாகா பட்டியல் !
banner

Related Stories

Related Stories