தேர்தல்2021

திருச்சியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை! DMK4TN

திருச்சி மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

திருச்சியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை! DMK4TN
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் எண்ணப்படும் தபால் வாக்குகளில் அனைத்து தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகமும் கூட்டணி கட்சியுமே முன்னிலை வகித்து வருகிறது.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

அதன்படி திருச்சி கிழக்கு முதல் சுற்றில் திமுகவின் இனிகோ இருதயராஜ் 833 பெற்று அதிமுக வெல்லமண்டி நடராஜனை விட (365) 468 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.

திருச்சி மேற்கு தொகுதி முதல் சுற்றில் திமுக கே.என்.நேரு 4,350 பெற்று அதிமுகவின் பத்மநாதனைவிட (1550) 2,800 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.

துறையூரில் அதிமுகவின் இந்திரா காந்தியை (3131) விட 549 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் குமார் 3680 வாக்குகள் பெற்று முன்னிலை.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி முதல் சுற்றில் திமுகவின் கதிரவன் 5678ம், அதிமுகவின் பரஞ்சோதி 2384ம் பெற்றுள்ளனர். 2844 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை.

banner

Related Stories

Related Stories