திமுக அரசு

தமிழகம் முழுவதும் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலை - பின்னடைவை சந்திக்கும் அ.தி.மு.க அமைச்சர்கள்!

தமிழகம் முழுவதும் அதிமுக அமைச்சர்கள் பின்னடைவை சந்திக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலை - பின்னடைவை சந்திக்கும் அ.தி.மு.க அமைச்சர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்நிலையில் நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

இந்நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். தற்போது வரை தி.மு.க கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்று வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 55 தொகுதியில் தற்போது தி.மு.க முன்னிலையில் உள்ளது. ஆனால் அ.தி.மு.க 12 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது.

இதனையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பின்னடைவை சந்தித்து வருகிறார். அதேப்போல், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

மேலும் வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஒ.எஸ்.மணியனும், விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னடைவை சந்தித்து வருகிறார். அதேப்போல் தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories