திமுக அரசு

“முழு சங்கி மாஃபா பாண்டியராஜன்” - அமைச்சரை தோற்கடிக்க உறுதிபூண்ட ஆவடி மக்கள்!

தமிழக மக்கள் நலனுக்கு எதிரான பா.ஜ.க-வின் கொள்கையைக் கடைபிடிப்பதில் அ.தி.மு.க அமைச்சர்களிலேயே இவருக்குத்தான் முதலிடம்.

“முழு சங்கி மாஃபா பாண்டியராஜன்” - அமைச்சரை தோற்கடிக்க உறுதிபூண்ட ஆவடி மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.கவிலிருந்து தனது அரசியல் பயணத்தைத் துவங்கிய மாஃபா பாண்டியராஜன் தற்போது அ.தி.மு.க அமைச்சராக இருந்தாலும், பா.ஜ.க-வின் முழுநேர விசுவாசியாகவே செயல்பட்டு வருகிறார்.

இந்தி திணிப்பு, நீட் தேர்வு என்பன உள்ளிட்ட தமிழக மக்கள் நலனுக்கு எதிரான பா.ஜ.க-வின் கொள்கையைக் கடைபிடிப்பதில் அ.தி.மு.க அமைச்சர்களிலேயே இவருக்குத்தான் முதலிடம்.

பா.ஜ.க-வின் நேரடி ஊதுகுழலாகச் செயல்படும் மாஃபா பாண்டியராஜன் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக நோட்டீஸ் அடித்து பிரச்சாரம் செய்த நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினரை பாண்டியராஜனின் ஆட்கள் தாக்கியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆவடியில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், “ஆவடி தொகுதி மக்களுக்கு ஒரு முக்கிய கடமை இருக்கிறது. மாஃபா பாண்டியராஜனை தோற்கடிக்க வேண்டும். அ.தி.மு.க.வில் இருந்து கொண்டு பா.ஜ.க. கட்சியை நடத்துகிறவர். அவர் முழுமையான சங்கி. அதனால்தான் அவரைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.

கீழடி தமிழர் பண்பாட்டை பாரதப் பண்பாடு என்று சொல்லி மழுங்கடித்த அவர் தமிழ் வளர்ச்சிச் துறை அமைச்சர் அல்ல, சமஸ்கிருத வளர்ச்சித்துறை அமைச்சர்.

பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அ.தி.மு.க.வில் இருந்து கொண்டிருக்கும் மாஃபியா பாண்டியராஜனை இந்தத் தொகுதியில் இருக்கும் மக்கள் துரத்தி அடிக்க வேண்டும். அதுதான் உங்கள் கடமை.” எனப் பேசினார்.

“முழு சங்கி மாஃபா பாண்டியராஜன்” - அமைச்சரை தோற்கடிக்க உறுதிபூண்ட ஆவடி மக்கள்!

தமிழக மக்கள் கடுமையாக நீட் தேர்வை வெளிப்படையாக ஆதரிக்கும் பா.ஜ.க விசுவாசியான மாஃபா பாண்டியராஜனை தோற்கடிக்க ஆவடி தொகுதி மக்கள் உறுதிபூண்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories