தேர்தல் 2024

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி... மாஸ் காட்டிய ராகுல் - எவ்வளவு வாக்கு வித்தியாசம்? முழு விவரம்!

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி... மாஸ் காட்டிய ராகுல் - எவ்வளவு வாக்கு வித்தியாசம்? முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 543 தொகுதிகளில் ஏற்கனவே குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமிருக்கும் 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி... மாஸ் காட்டிய ராகுல் - எவ்வளவு வாக்கு வித்தியாசம்? முழு விவரம்!

தொடர்ந்து நாடு முழுவதும் இந்தியா கூட்டணி முன்னணி வகித்து வரும் நிலையில், பாஜகவின் பிம்பம் உடைந்துள்ளது அனைவர்க்கும் புரியவந்துள்ளது. பாஜகவின் பொய்யான வாக்குறுதிகள் மக்கள் அறிந்து, இந்த தேர்தலில் செயல்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளிலும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கேரளாவில் வயநாடு தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜாவை விட 3,54,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதே போல் உ.பியில் ரேபரேலி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை தோற்கடித்து 3,80,929 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஏறுமுகமாக இருக்கும் நிலையில், ராகுலின் இந்த அபார வெற்றி, மக்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories