தேர்தல் 2024

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : உடைந்த பாஜக பிம்பம்... நாடு முழுவதும் முன்னேறும் இந்தியா கூட்டணி !

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : உடைந்த பாஜக பிம்பம்... நாடு முழுவதும் முன்னேறும் இந்தியா கூட்டணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 543 தொகுதிகளில் ஏற்கனவே குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமிருக்கும் 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து நாடு முழுவதும் இந்தியா கூட்டணி முன்னணி வகித்து வரும் நிலையில், பாஜகவின் பிம்பம் உடைந்துள்ளது அனைவர்க்கும் புரியவந்துள்ளது. காரணம், பாஜகவின் தேர்தல் பிரச்சாரமே வெறுப்பு பிரச்சாரமாக மட்டுமே இருந்தது. எதிர்க்கட்சிகள் மீது குறிப்பாக காங்கிரஸ் மீது பாஜக விதைத்த வெறுப்பு பிரசாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : உடைந்த பாஜக பிம்பம்... நாடு முழுவதும் முன்னேறும் இந்தியா கூட்டணி !

மேலும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பிரசாரம் மோடியின் கீழ்த்தரமான செயலை பிரதிபலித்தது. மோடியின் வெறுப்பு பிரச்சாரமே தற்போது அவருக்கு ஒரு வினையாக அமைந்துள்ளது. மதச்சார்பின்மை நாடான இந்தியாவில் மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வரும் பாஜகவின் முயற்சியை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முறியடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூட, பாஜக கூட்டணி 370-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்றும், இந்தியா கூட்டணி 190 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் ஒரு பிம்பத்தை உருவாக்கியது. எனினும் அந்த கருத்துக்கணிப்பு போலி என்றும், Godi மீடியா பாஜகவிடம் இருந்து பணம் பெற்று, அவர்களுக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு வெளியானதாகவும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து விமர்சித்து வந்தது.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : உடைந்த பாஜக பிம்பம்... நாடு முழுவதும் முன்னேறும் இந்தியா கூட்டணி !

தேசிய பங்குச்சந்தையும் மும்பை பங்குச்சந்தை குறியீடும் 2000 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது. தொடர்ந்து குஷியான பாஜகவினரும் கொண்டாட்டத்தில் துள்ளிகுதித்தனர். 400 பார் (400 தொகுதி) வெற்றி பெறுவோம் என்று மோடி மற்றும் பாஜகவினர் கூறி வந்தது நினைவாகிப்போகிறது என்று கனவு கோட்டையை கட்டிக்கொண்டிருந்தனர்.

இந்த சூழலில் இன்று வெளியாகியுள்ள தேர்தல் முடிவின் விவரங்களின்படி இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பாஜக ஆளும் உத்தர பிரதேசத்திலும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் தங்கள் அமோக வரவேற்பை கொடுத்துள்ளனர். இந்தியா கூட்டணி பல்வேறு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதனிடையே வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி, காலை முதல் சில மணி நேரமாகவே 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் இருந்து வந்தார். தற்போதும் உத்தர பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி சுமார் 3,31,974 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை உள்ளார். இது வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடியை விட இரு மடங்கு வாக்கு வித்தியாசம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    banner

    Related Stories

    Related Stories