தேர்தல் 2024

மக்களவைத் தேர்தல் 2024 : பாஜக ஆளும் மணிப்பூரில் இந்தியா கூட்டணி முன்னிலை !

பாஜக ஆளும் மணிப்பூரில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024 : பாஜக ஆளும் மணிப்பூரில் இந்தியா கூட்டணி முன்னிலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 543 தொகுதிகளில் ஏற்கனவே குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமிருக்கும் 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தல் 2024 : பாஜக ஆளும் மணிப்பூரில் இந்தியா கூட்டணி முன்னிலை !

தொடர்ந்து நாடு முழுவதும் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில், தற்போது பாஜக ஆளும் மணிப்பூரிலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. மணிப்பூரில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியிலும், மற்ற தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில், 2 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் 2 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் Alfred Kan-Ngam Arthur மற்றும் Angomcha Bimol Akoijam வேட்பாளர்கள் தற்போது முன்னிலையில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் 2024 : பாஜக ஆளும் மணிப்பூரில் இந்தியா கூட்டணி முன்னிலை !

பாஜக ஆளும் மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குக்கி மற்றும் மெய்தி சமூக மக்களுக்கு இடையே பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். மேலும் 2 பெண்கள் நடு ரோட்டில் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பாஜக இதனை கண்டுகொள்ளாமல் இருந்தது.

மோடியும் இதனை நாடாளுமன்றத்தில் விவாதம் செய்ய மறுத்து வந்தார். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய போராட்ட குரலால், மோடி தனது வாயை திறக்க நேர்ந்தது. அதுவும் கலவரத்தை கட்டுப்படுத்துவோம் என்று போலியான வாக்குறுதிகளை கொடுத்து, மேலும் கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தார். தற்போது அதன் விளைவாக பாஜக போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் தற்போது தோல்வி முகத்தை தழுவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories