தேர்தல் 2024

”இந்தியா நிச்சயம் வெற்றிப்பெறப் போகிறது” : ராகுல் காந்தி MP நம்பிக்கை!

இந்தியா நிச்சயம் வெற்றிப்பெறப் போகிறது என ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

”இந்தியா நிச்சயம் வெற்றிப்பெறப் போகிறது” : ராகுல் காந்தி MP நம்பிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. கடந்த ஏப். 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இதையடுத்து அடுத்தடுத்த கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளது. 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 25 ஆம் தேதி நடந்தது.

இன்னும் இறுதி மற்றும், 7 ஆம் கட்ட தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.தேர்தல் பிரச்சாரம் முடிந்ததை அடுத்து, இந்தியா வெற்றிப்பெற போகிறது என ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நாட்டின் அரசியலமைப்பை காப்பாற்றுவதற்காக எந்த ஒரு தயக்கமும் இன்றி, நின்ற கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமன நன்றி. பிரதமர் திசைதிருப்பவதற்காக பல்வேறு முயற்சிகள் செய்தாலும், பொதுமக்களின் உண்மையான பிரச்சினைகளில் நாம் போராடி வெற்றி பெற்றிருக்கிறோம்.

விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் பக்கம் நின்று குரல் கொடுத்தோம். கடைசி நேரம் வரை வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எந்திரங்கள் வைத்துள்ள அறைகளை கண்காணிக்க வேண்டும். இந்தியா நிச்சயம் வெற்றிப்பெறப் போகிறது." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories