அரசியல்

வெறுப்பை உமிழ்ந்து, பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைத்த மோடி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

நாட்டு மக்களின் நிகராளி என்பதையே மறந்து, குறிப்பிட்ட சமூகத்தினரையும், எதிர்க்கட்சிகளையும் பரம்பரை எதிரிகளாக பார்க்கும் மோடி.

வெறுப்பை உமிழ்ந்து, பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைத்த மோடி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியா சுதந்திரம் பெற்று, ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி, நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய், தேவகவுடா, ஐ. கே. குஜ்ரால், மன்மோகன் சிங் என இத்தனை பிரதமர்களும், தங்களது ஆட்சியை நடத்தி சென்றாலும்,

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி போன்று வெறுப்பை உமிழ்பவராகவும், பொய்களை அள்ளித்தெளிப்பவராகவும், வேறு எந்த பிரதமரும் இருந்ததில்லை என்பது, பல்வேறு அரசியல் தலைவர்களால் முன்மொழியப்பட்டு வந்த நிலையில், தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களாலும் முன்மொழியப்பட்டுள்ளது.

அவ்வகையில், 2004 முதல் 2014 வரை இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், “பிரதமர் பதவியின் கண்ணியத்தையும், பொறுப்பையும் குறைத்த முதல் பிரதமர் மோடி.

வெறுப்பை உமிழ்ந்து, பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைத்த மோடி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

நடப்பு மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முழுமையையும் நான் கவனித்தேன்.

இதுவரை எந்த பிரதமரும், மோடியை போன்று அரசியலமைப்பிற்கு எதிரான வகையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது எதிர்க்கட்சியனரையோ குறிவைத்து வெறுக்கத்தக்க வகையிலும், கீழ்த்தரமாகவும் பேசி நான் பார்த்ததில்லை” என பதிவிட்டுள்ளார்.

மோடியின் இத்தகைய செயல்களால், தனிப்பட்ட அரசியல் நடவடிக்கைகளை கடந்து, ஒரு நாட்டின் பிரதிநிதியாக விளங்கும் மோடி, தனது பிரதமர் பதவியை கொச்சைப்படுத்தியது மட்டுமல்லாது, நாட்டின் நிர்வாகத்தன்மையையே சீர்கேடாக்கியது கடும் சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிவதையொட்டி, கன்னியாகுமரிக்கு தியானம் செய்ய இருப்பதாக மோடி தெரிவித்ததற்கு, “பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தெரிவித்தது, Shooting நடத்த தான், முடிந்தால் கேமராக்கள் இன்றி தியானம் செய்யவும்” என்று பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி கேலி செய்துள்ளார்.

இதனிடையே, கேலிகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகும் மோடி, தனது ஆட்சிக்காலம் ஜூன் 4 உடன் முடிவடைவதை உணர வேண்டும் என்றும், பெருவாரியான மக்கள், தங்களது கருத்துகளை பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories