அரசியல்

இந்தியா கூட்டணியில், பா.ஜ.க கூட்டணி (NDA) கட்சிகளும் இணைய வாய்ப்பு : காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம்!

தேர்தல் முடிவு நெருங்குவதையொட்டி, சிதைவுறும் பாதையில் பா.ஜ.க கூட்டணி (NDA).

இந்தியா கூட்டணியில், பா.ஜ.க கூட்டணி (NDA) கட்சிகளும் இணைய வாய்ப்பு : காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலின், முதல் 6 கட்டங்கள் முடிவுற்று, ஜூன் 1 அன்று, இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அதாவது, மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 57 தொகுதிகளில் மட்டுமே, வாக்குப்பதிவு நிலுவையில் உள்ளது. எனவே, பல்வேறு கணிப்புகள் கசியத்தொடங்கியுள்ளன.

அக்கணிப்புகளில் பல, இந்தியா கூட்டணிக்கு சார்பாகவும், பா.ஜ.க கூட்டணியின் வீழ்ச்சிக்கு வித்திடும் வகையிலும் இருந்தாலும், Godi ஊடகங்களின் கதை மட்டும் வேறாகவே இருக்கிறது.

இல்லாத பலத்தை பா.ஜ.க.விற்கு தருவதும், இல்லாத வரலாற்றை உண்மையாக வைத்து கூறுவதும், மோடியின் பேச்சுகள் என்னவாக இருந்தாலும், அதனை சற்றும் சிரிப்பின்றி உண்மையாகவே காட்சிப்படுத்துவதுமே, Godi ஊடகங்களின் வேலை.

அவ்வாறு இருக்கையில், சில ஊடகங்கள் மட்டும் அரசியல் பார்வையின் உண்மை தன்மையை வெளிச்சமிட்டு காட்டுவனவாக இருக்கின்றன. அது போன்ற வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களில் ஒரு ஊடகத்திற்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில்,

இந்தியா கூட்டணியில், பா.ஜ.க கூட்டணி (NDA) கட்சிகளும் இணைய வாய்ப்பு : காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம்!

“தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் நேரமும் நெருங்கிவிட்டது.

2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது கூட, பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்த அடுத்த நாள் தான், மன்மோகன் சிங் பெயர் முன்மொழியப்பட்டது. எனினும், பிரதமர் வேட்பாளர் பெயர் முன்னே, அரசியல் வட்டாரங்களில் தெளிவடைந்தது.

நடப்பு தேர்தலில், அந்த சூழ்நிலை கூட இருக்காது. இந்தியா கூட்டணியின் எந்த கட்சி, அதிக தொகுதிகளில் வெற்றிபெறுகிறதோ, அந்த கட்சியின் சார்பில் ஒருவர், பிரதமராக முன்னிறுத்தப்படுவார்.

இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தாலும், அது எவ்வித அரசியல் குதர்க்கங்களையும் செய்யாமல், உண்மையையும், மனிதாபிமானத்தையும் முன்னிறுத்தும் கட்சிகளை ஏற்றுக்கொள்ளும். அது NDA கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் சரி. அதற்கான வாய்ப்புகளும் தற்போது அதிகரித்து வருகிறது.

மோடியும், கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள சென்று, சரியான வழியை தேர்ந்தெடுத்திருக்கிறார். தேர்தல் முடிவுக்கு பின், அவரது ஓய்வு நாட்களில் தியானம் செய்ய பழகிக்கொள்வது நல்லது தான்” என தெரிவித்துள்ளார்.

இதனால், இந்தியா கூட்டணியிடம் இருக்கிற இந்த வெற்றி நம்பிக்கை, பா.ஜ.க.விடம் இல்லாததே, பா.ஜ.க.வின் தோல்வியை உறுதிப்படுத்துகிறது என இணையவாசிகள் தங்களது கருத்துகளை பரவலாக பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories