தேர்தல் 2024

மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!

மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தல் 4 கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அனைத்து கட்சியினரும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜக தனது ஒவ்வொரு பிரசாரத்தின்போதும், தேர்தல் விதிகளை மீறி மக்கள் மத்தியில் இந்து - முஸ்லீம் மத வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதால், இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக கேவலமாக பேசினார்.

மோடியின் வெறுப்பு பேச்சுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், இப்போது வரை அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. மேலும் மாறாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பற்றியும், காங்கிரஸ் பற்றியும் கடும் விமர்சனம் செய்து வருகிறார். இஸ்லாமியர்கள் குறித்த வெறுப்பு பேச்சு நாட்டையும் தாண்டி சர்வதேச செய்தியாக வெளியானது. எனினும் இதற்கு தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!

இந்த சூழலில் தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு அனைத்தையும் கொடுத்து விடுவதாகவும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இராமர் கோயில் புல்டோசர் கொண்டு இடிப்பர் என்றும், அவதூறு பரப்பி வருகிறார். இவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துவ வரும் நிலையில், வழக்கம்போல் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!

இந்த நிலையில் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையத்தை சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “பிரதமர் மோடி தேர்தல் விதிகளை தொடர்ந்து மீறி வருகிறார். அவரது மதவாத, வகுப்புவாத பேச்சுகளை கண்டுகொள்ளாமல் இருப்பது தற்போதைய தேர்தல் ஆணைய அதிகாரிகளின் DNA-விலேயே உள்ளது.

மோடியின் வகுப்புவாத பேச்சுகள் குறித்து நான் அளித்த புகார்களை தேர்தல் ஆணையம் முற்றிலும் புறக்கணித்துள்ளது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை சமநிலையுடன் தேர்தல் ஆணையம் நடத்தவில்லை. இதன் மூலம் 'நாட்டின் பெருமை தேர்தல் ஆணையம்' என்ற முழக்கம் வெற்று முழக்கமாக மாறியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories