தேர்தல் 2024

பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?

பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலானது 2 கட்டங்கள் முடிந்த நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அடுத்தடுத்து தேர்தல் நடைபெற்று ஜூன் 1-ம் தேதி நிறைவடைக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பாஜகவுக்கு மக்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வரும் நிலையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. எனினும் பாஜகவும், மோடியும் வழக்கம்போல் தங்கள் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். அதன்படி மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய பகுதிகளில் ரோட் ஷோ மேற்கொண்டு வருகிறார்.

பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?

தொடர்ந்து மேடைகளில் வெறுப்பை விதைக்கும் விதமாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்தையும் தெரிவித்து வருகிறார். தேர்தல் ஆணையத்தில் விதிகளை மீறி பேசிய மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார் அளித்தது. எனினும் மோடியை தொடர்ந்து பாஜகவினரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளையே தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் கர்நாடக பாஜக சமூக வலைதள பக்கத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்குக்ம் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டது பாஜக. மேலும் SC, ST, OBC இடங்களை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கொடுப்பதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?

தொடர்ந்து இந்த வீடியோ வெளியிட்டதற்காக பாஜக தேசிய தலைவர் JP நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாள்வியா, பாஜக கர்நாடக மாநிலத் தலைவர் BY விஜயேந்திரா ஆகியோர் மீது காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து கர்நாடக காவல்துறையிலும் புகார் அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் புகாரின் அடிப்படையில் JP நட்டா, அமித் மாள்வியா, BY விஜயேந்திரா ஆகியோர் மீது கர்நாடக போலீசார் FIR பதிவு செய்துள்ளனர். பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு தற்போது மேலும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories