தேர்தல் 2024

பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!

பாஜக தேர்தல் அறிக்கையின் 76 பக்கத்தில் சுமார் 67 முறை மோடி என்ற பெயர் இடம்பெற்றுள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலானது 2 கட்டங்கள் முடிந்த நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அடுத்தடுத்து தேர்தல் நடைபெற்று ஜூன் 1-ம் தேதி நிறைவடைக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பாஜகவுக்கு மக்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வரும் நிலையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. எனினும் பாஜகவும், மோடியும் வழக்கம்போல் தங்கள் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். அதன்படி மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய பகுதிகளில் ரோட் ஷோ மேற்கொண்டு வருகிறார்.

பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!

இதனிடையே தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு முக்கிய தேவைகள் குறித்த வாக்குறுதியை அளிக்கவில்லை. குறிப்பாக பெட்ரோல், கேஸ் விலையேற்றம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை இடம்பெறவில்லை.

இந்த நிலையில், 76 பக்கங்கள் கொண்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையில் சுமார் 67 முறை 'மோடி' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் GST - 3, வேலைவாய்ப்பு - 2, இடஒதுக்கீடு - 2, பணவீக்கம் - 1, ஜம்மு&காஷ்மீர் - 1, முஸ்லீம் - 1, மணிப்பூர் - 1, சமூக நீதி - 0, LGBTQ - 0 உள்ளிட்ட வார்த்தைகள் குறுகிய எண்ணிக்கையிலேயே இன்னு சொல்லப்போனால் ஒரு இலக்கு எண்ணில் மட்டுமே இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!

அதே போல் 76 பக்கங்கள் கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்பு என்ற வார்த்தையே அதிக எண்ணிக்கையாக 36 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் GST - 14, இடஒதுக்கீடு - 6, பணவீக்கம் - 3, ஜம்மு & காஷ்மீர் - 1, முஸ்லீம் - 0, மணிப்பூர் - 2, சமூக நீதி - 4, LGBTQ - 3 உள்ளிட்ட வார்த்தைகள் அந்தந்த எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டையும் குறிப்பிட்டு, 'இதுதான் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையேயான வித்தியாசம்' என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல் அதிக இடஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக மோடி பேசிய பொய் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. இப்படி வெறுப்பு பேச்சை மக்களிடையே விதைத்து ஆதாயம் தேடும் பாஜகவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories