தேர்தல் 2024

பாஜக ஆளும் அருணாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவின்போது வெடித்த வன்முறை... - மறு வாக்குப்பதிவு எப்போது?

அருணாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவின்போது வன்முறை ஏற்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு எப்போது என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாஜக ஆளும் அருணாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவின்போது வெடித்த வன்முறை... - மறு வாக்குப்பதிவு எப்போது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19-ம் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்டவற்றுக்கு ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில், இதில் அருணாச்சல பிரதேசத்துக்கு சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து நடைபெற்றது.

பாஜக ஆளும் அருணாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவின்போது வெடித்த வன்முறை... - மறு வாக்குப்பதிவு எப்போது?

அருணாசலச்சத்தில் 2 மக்களவை மற்றும் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக தனது சித்து வேலைகளை காட்டி 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி பெற்று விட்டது. எனவே மீதமுள்ள 50 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 2 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த 19-ம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

பாஜக ஆளும் அருணாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவின்போது வெடித்த வன்முறை... - மறு வாக்குப்பதிவு எப்போது?

இந்த சூழலில் வாக்குப்பதிவு நடைபெற்ற நாளன்று டிங்சர், மொலோம், போக்னே, சரியோ உள்ளிட்ட 8 வாக்குச்சாவடிகளில் பதற்றம் நிலவியது. அதன் எதிரொலியாக அன்றயதினம் அந்த 8 வாக்குச்சாவடிகளில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கடும் சேதாரமானது. தொடர்ந்து இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அந்த வாக்குச்சாவடிகளுக்கான மறு வாக்குப்பதிவு தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வன்முறை ஏற்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும். காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும். எனவே வாக்காளர்கள் விரைந்து வாக்குகளை செலுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

banner

Related Stories

Related Stories