அரசியல்

அம்பலமான மோடியின் பொய் பரப்புரை : "பிரதமரின் நச்சுப் பேச்சு மிகவும் மோசமானது" - முதலமைச்சர் விமர்சனம் !

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டி பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அம்பலமான மோடியின் பொய் பரப்புரை : "பிரதமரின் நச்சுப் பேச்சு மிகவும் மோசமானது" - முதலமைச்சர் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பாஜக 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறாது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் பாஜக தேர்தலை வெற்றிபெற மீண்டும் வெறுப்பு பேச்சுகளை கையில் எடுத்துள்ளது.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாக தாக்கிப் பேசுவதுபோல், இஸ்லாமியர்களை குறிவைத்து சாடி பேசியுள்ளார்.தனது உரையில், காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்தப்போது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உள்ளது என்று கூறினார்கள்.

தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, பின்னர் மன்மோகன் சிங் அரசு சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னதைப்போல, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இப்போது சொல்கிறது. அர்பன் நக்சல்கள் உங்களது தாலியை கூட விடமாட்டார்கள் என்று பேசியுள்ளார். மேலும், 2006-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இதனை கூறினார் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், அப்போது மன்மோகன் சிங் அப்படி எதையும் கூறவில்லை என்பதையும், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் பொய் கூறியுள்ளதையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டு அதனை அம்பலப்படுத்தியது. இந்த நிலையில், பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பிரதமர் மோடியின் நச்சுப் பேச்சு மிகவும் மோசமானது மற்றும் மிகவும் வருந்தத்தக்கது. தன் மீதான பொதுமக்களின் கோபத்திற்கு அஞ்சி, மோடி மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வெறுப்பூட்டும் பேச்சை பேசியுள்ளார். மோடியின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கைவிட்டுவிட்டது.

இந்திய கூட்டமைப்பு உறுதியளித்த சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நீண்ட கால தாமதமான ஒரு தீர்வாகும். பிரதமர் அதை திரித்து, சமூக ரீதியாக பின்தங்கிய சமூகங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் பதவிகளில் உரிய பங்கை வழங்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.பாஜகவின் வஞ்சகமான திசை திருப்பும் உத்திகள் குறித்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்துவதில் நமது உறுதிப்பாட்டை உறுதி செய்ய வேண்டும்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories