தேர்தல் 2024

தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் நாளை முதல்கட்ட தேர்தல் : முழுவிவரம்!

21 மாநிலங்களில் நாளை முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் நாளை முதல்கட்ட தேர்தல் : முழுவிவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் நாளை ஏப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 1 ஆம் தேதி வாக்குபதிவு நிறைவடைந்து ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

இந்நிலையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 1 தொகுதியிலும் முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது.

அதேபோல் அருணாச்சல பிரதேசம் ( 2 தொகுதி), அசாம் (5 தொகுதி), பீகார் (5 தொகுதி ), சத்தீஸ்கர் (1 தொகுதி ), மத்திய பிரதேசம் (6 தொகுதி ), மகாராஷ்டிரா (5 தொகுதி ), மணிப்பூர் (2 தொகுதி ), மேகலயா (2 தொகுதி ), மசோரம் (1 தொகுதி ), நாகாலாந்து (1 தொகுதி ), ராஜஸ்தான் (12 தொகுதி ), சிக்கிம் (1 தொகுதி ), திரிபுரா (1 தொகுதி ), உத்தர பிரதேசம் (8 தொகுதி ), உத்தரகாண்ட் (5 தொகுதி ), மேற்குவங்கம் (3 தொகுதி ), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1 தொகுதி ), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1 தொகுதி ), லட்சத்தீவு (1 தொகுதி ) ஆகிய மாநிலங்களில் நாளை முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது.

இந்த மக்களவை தேர்தலில் இதுவரை இல்லாத அளவு அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி களம் காண்கிறார்கள். இதனால் அரசியல் வட்டத்தில் இந்த தேர்தல் மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல், விவசாய விரோத சட்டங்கள், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பெண்கள் மீது அடக்குமுறை, நீட் தேர்வு, ஜி.எஸ்.டி என கடந்த 10 ஆண்டுகளாக மோடி ஆட்சியின் கொடூர சட்டங்களால் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இது இந்த தேர்தலில் எதிரொளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories