தேர்தல் 2024

நாடாளுமன்றத் தேர்தல் : தி.மு.க போட்டியிடும் தொகுதிகள் என்ன? - முழு விவரம்!

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் : தி.மு.க போட்டியிடும் தொகுதிகள்  என்ன? - முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மற்றும் பா.ஜ.க கூட்டணி என இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்குப் பாசிச பா.ஜ.கவை வீழ்த்தும் நோக்கில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கித் தேர்தலைச் சந்திக்கிறார்கள்.

இக்கூட்டணி உடைந்து விடும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் உறுதியுடன் இந்த நாடாளுமன்றத் தேர்தலை இந்தியா கூட்டணி சந்திக்கிறது. டெல்லி, ஹரியானா, குஜராத், கோவா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் தி.மு.க 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதன் விவரம் பின்வருமாறு:-

1. வட சென்னை

2. மத்திய சென்னை

3. தென்னை சென்னை

4. ஸ்ரீபெரும்புதூர்

5. காஞ்சிபுரம் (தனி)

6. ஆரணி

7. அரக்கோணம்

8. வேலூர்

9. திருவண்ணாமலை

10. பெரம்பலூர்

11. கோவை

12. பொள்ளாச்சி

13. ஈரோடு

14. நீலகிரி (தனி)

15. சேலம்

16. கள்ளக்குறிச்சி

17. தஞ்சாவூர்

18. தருமபுரி

19. தூத்துக்குடி

20. தென்காசி (தனி)

21. தேனி

banner

Related Stories

Related Stories