தி.மு.க

தலைவர் ‘கலைஞரின் மனசாட்சி’ முரசொலி மாறனின் 87வது பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

முரசொலி மாறனின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

தலைவர் ‘கலைஞரின் மனசாட்சி’ முரசொலி மாறனின் 87வது பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு  மு.க.ஸ்டாலின் மரியாதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் மனசாட்சி என போற்றப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87வது பிறந்த நாள் இன்று.

இதனை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது முழு உருவ சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு தி.மு.க தலைவர் மு‌.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.

இதைத்தொடர்ந்து இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் முரசொலி மாறனின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

இந்நிகழ்கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் ஏ.வா.வேலு, நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், என்.ஆர்.இளங்கோ, கௌதம சிகாமணி, சென்னை மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், சிற்றரசு, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், வாகை சந்திரசேகர், பா.ரங்கநாதன், ரவிச்சந்திரன், எம்.கே.மோகன், தாயகம் கவி, தலைமை நிலைய அலுவலக செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories