தி.மு.க

ஓடி ஒளியும் அதிமுக.. தேடிச் சென்று உதவும் திமுக.. இன்று 5,000 பேருக்கு நிவாரணம் வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

சென்னையின் பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஓடி ஒளியும் அதிமுக.. தேடிச் சென்று உதவும் திமுக.. இன்று 5,000 பேருக்கு நிவாரணம் வழங்கினார் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று (17-05-2020) காலை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையின் பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:

துறைமுகம் தொகுதியில் மங்கல வாத்தியம் வாசிப்போர்கள் 180 நபர்களுக்கும், எழும்பூர் தொகுதியில் 126 போதகர்களுக்கும், திரு.வி.க நகர் தொகுதியில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர காய்கறி வியாபாரிகள் 200 பேருக்கும் அரிசி, உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

P2 காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசம், சோப்பு, N95 முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினார்.

ஓடி ஒளியும் அதிமுக.. தேடிச் சென்று உதவும் திமுக.. இன்று 5,000 பேருக்கு நிவாரணம் வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

இதனையடுத்து, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட, வார்டு 68 - தீட்டி தோட்டம் 4-வது தெரு,செம்பியம் வியாபாரிகள் நலச்சங்கம் - கிழக்குப் பகுதியிலுள்ள பாக முகவர்கள், பேஜ் கமிட்டி மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என 2500 நபர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

வார்டு 67 - எஸ்.ஆர்.பி கோவில் தெருவிலுள்ள துறையூர் நாடார் திருமண மண்டபத்தில், மேற்குப் பகுதியிலுள்ள பாக முகவர்கள், பேஜ் கமிட்டி மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என 2500 நபர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர், வார்டு 67 - எஸ்.ஆர்.பி கோவில் தெருவிலுள்ள நால்வர் திருமண மண்டபத்தில், கொளத்தூர் தொகுதியிலுள்ள 85 ஓவியர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார். வார்டு 66 - ஜவஹர் நகர் அலுவலகத்தில், ஜிம் பயிற்சியாளர்களுக்கு 160 பேருக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார்.

வார்டு 67 - ஜி.கே.எம் காலனி 24-வது தெருவில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.மகேஷ்குமார் அவர்களின் தந்தை மறைவிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தார்.

பின்னர், அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட, கொரட்டூர் பேருந்து நிலையத்தில், 200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், அம்பத்தூர் எஸ்டேட்டில் முடி திருத்தும் தொழிலாளர்கள் 160 பேருக்கும், அருந்ததியின மக்கள் 50 பேருக்கும் அரிசி, உணவுப் பொருட்கள், மளிகை பொருட்கள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

மங்களபுரத்தில் 26.04.2020 அன்று மாரடைப்பால் மறைந்த அம்பத்தூர் மேற்கு பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் M.S.வினோத் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று சென்று துக்கம் விசாரித்தார்.

பின்னர், வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட, வில்லிவாக்கம் கிழக்குப் பகுதி வட்டம் 97-ல் 04.05.2020 அன்று உடல் நலக்குறைவால் மறைந்த வட்டச் செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தார்.

banner

Related Stories

Related Stories