தி.மு.க

ஊரடங்கில் காணாமல் போன அ.தி.மு.க.. களத்தில் இறங்கி நிவாரண உதவிகளை வழங்கிய தி.மு.க தலைவர்! #CoronaLockdown

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கால் அவதியுறும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

ஊரடங்கில் காணாமல் போன அ.தி.மு.க.. களத்தில் இறங்கி நிவாரண உதவிகளை வழங்கிய தி.மு.க தலைவர்! #CoronaLockdown
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் உணவின்றி, அத்தியாவசிய பொருட்களை கிடைக்காமல் அவதியுறும் ஏழை எளிய மக்களுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி தமிழகமெங்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வீடட்றவர்களுக்காக நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு உணவு அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று (11-05-2020) காலை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையின் பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

சென்னை கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட துறைமுகம் தொகுதியில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைத்து சீர்வரிசைகளை வழங்கினார்.

ராஜா அண்ணாமலை மன்றத்தில் 70 அர்ச்சகர்கள் மற்றும் 60 ஆசிரியர்களுக்கு, அரிசி, 15 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

ஊரடங்கில் காணாமல் போன அ.தி.மு.க.. களத்தில் இறங்கி நிவாரண உதவிகளை வழங்கிய தி.மு.க தலைவர்! #CoronaLockdown

பின்னர், எழும்பூர் தொகுதி லஷ்மி மஹாலில் ரத்ததானம் செய்த 126 பேருக்குச் சான்றிதழ் வழங்கியதோடு, புத்தாடை மற்றும் அரிசி வழங்கி அவர்களைப் பாராட்டினார்.

திரு.வி.க.நகர் தொகுதி, ஓட்டேரி செல்லப்பா தெருவில் 160 முடிதிருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரிசி, அத்தியாவசிய மளிகை பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

அடுத்ததாக, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 6வது மண்டல அலுவலகத்தில், 900 தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான அரிசி (5 கிலோ × 900), போர்வை (1 × 900), ஸ்டீல் தட்டு (1 × 900), ஸ்டீல் டம்ளர் (2 × 900) ஆகியவற்றை மண்டல அலுவலக அதிகாரி பா.நாராயணன் அவர்களிடம் வழங்கினார்.

69-வது வார்டு கௌதமபுரத்தில் உள்ள 448 குடிசை மாற்று வாரிய வீடுகளை புதியதாகக் கட்டிக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதன் பயனாக, தற்போது அந்த வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெறுவதால், அங்கு குடியிருந்தவர்கள் தற்போது வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள். அவர்களில் 400 தினக்கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, அத்தியாவசிய மளிகை மற்றும் உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றைக் கழகத் தலைவர் வழங்கினார்.

ஜி.கே.எம் காலனி நாடார் திருமண மண்டபத்தில், 340 செவிலியர்களுக்குப் போர்வை, பழக்கூடை, அரிசி, அத்தியாவசிய மளிகை மற்றும் உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்

ஊரடங்கில் காணாமல் போன அ.தி.மு.க.. களத்தில் இறங்கி நிவாரண உதவிகளை வழங்கிய தி.மு.க தலைவர்! #CoronaLockdown

லோகோ ஒர்க்ஸ், 67-வது வட்ட குடிநீர் அலுவலகத்தில், சென்னை பெருநகர குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்றும் ஊழியர்கள் 440 பேருக்கு அரிசி, அத்தியாவசிய மளிகை மற்றும் உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

இதன்பிறகு, வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அயன்புரம் சௌந்தரனார் பள்ளி வளாகத்தில், அரிசி, 12 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள், உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை 300 கழக நிர்வாகிகள் குடும்பங்களுக்கு வழங்கினார்.

பின்னர், சேனிடைசர் 500ML, N95 முகக்கவசம், சோப்பு மற்றும் கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களை அயன்புரம் K2 காவல் நிலையத்திற்கு வழங்கினார்.

banner

Related Stories

Related Stories