தி.மு.க

“நல்ல திட்டங்களும் கிடையாது; இ-டெண்டரிலும் முறைகேடு” : அ.தி.மு.க அரசை தெறிக்கவிட்ட செந்தில் பாலாஜி!

நல்ல திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் மட்டும்தான் கொண்டுவரப்பட்டன என தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

“நல்ல திட்டங்களும் கிடையாது; இ-டெண்டரிலும் முறைகேடு” : அ.தி.மு.க அரசை தெறிக்கவிட்ட செந்தில் பாலாஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மக்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் பேசிவருகின்றனர்.

நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

நெடுஞ்சாலைத்துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசுகையில், “2006- 2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் நிதிநிலை அறிக்கையில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 640 கோடி ரூபாய் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 6.5% நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

“நல்ல திட்டங்களும் கிடையாது; இ-டெண்டரிலும் முறைகேடு” : அ.தி.மு.க அரசை தெறிக்கவிட்ட செந்தில் பாலாஜி!

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் 17 லட்சத்து 47 ஆயிரத்து 28 கோடி ரூபாய் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இதில் வெறும் 5% மட்டுமே நெடுஞ்சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை வசதியை மேம்படுத்த போதுமான நிதியை இந்த அரசு ஒதுக்கவேண்டும். ஒதுக்கிய நிதியை முறையாகச் செலவிட வேண்டும்.

மேலும், கடந்த 2019 - 2020 அரசின் கொள்கை விளக்கப் புத்தகத்தில் பக்கம் ஏழு வகை சாலை திட்டங்கள் பட்டியலிட்டுள்ளது. அதில், தேசிய நெடுஞ்சாலைக்கு1,900 கி.மீ, இந்திய தேசிய நெடுஞ்சாலை 4,710 கி.மீ., மாநில நெடுஞ்சாலை 11,130 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே பட்டியல்தான் 2020 -2021 மானியக் கோரிக்கை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஒரு கி.மீ கூட எந்த மாற்றமும் இல்லை. நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படவே இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

அ.தி.மு.க ஆட்சியில் விஷன் 2023 திட்டம் கொண்டுவரப்பட்டு நெடுஞ்சாலைத் துறைக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலும், எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலும் திட்டங்கள் போடப்பட்டன. அந்த நிதி முழுமையாக பெறப்பட்டு இத்திட்டம் இரண்டு ஆண்டுக்குள் நிறைவடையுமா அல்லது இந்த திட்டம் கைவிடப்படுமா?

அதேபோல் நெடுஞ்சாலைத்துறையில் இ-டெண்டர் முறை கடைபிடிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் தெரிவித்தார். கர்நாடகாவில் நடைபெறும் இ-டெண்டரில் வெளிப்படைத் தன்மை உள்ளது. ஆனால், தமிழகத்தில் குறிப்பிட்ட இரண்டு மூன்று பேருக்கு மட்டுமே அந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீரின்றி அமையாது உலகு என்ற வார்த்தைக்கு இணங்க மழைக்காலங்களில் மழைநீரை சேமித்து வைக்கும் திட்டங்களை அரசு ஏற்படுத்த வேண்டும். அதுதான் நல்ல ஆட்சியாக இருக்கமுடியும். அப்படிப்பட்ட திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் மட்டும்தான் கொண்டுவரப்பட்டன.

“நல்ல திட்டங்களும் கிடையாது; இ-டெண்டரிலும் முறைகேடு” : அ.தி.மு.க அரசை தெறிக்கவிட்ட செந்தில் பாலாஜி!

தமிழகம் முழுவதும் ஆற்று மணல் அள்ளுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக நாமக்கல், திருச்சியில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவது போல் கரூரில் ஆற்றில் மணல் எடுக்கப்படுகிறது‌. முறையாக மணல் அள்ளுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்” என மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் பேசினார்.

banner

Related Stories

Related Stories