தி.மு.க

“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து!

உடன்பிறப்புகளின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 67வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தமிழர் எழுச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழக மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும், சமதர்மம் பேணவும் பாசிச, அராஜக சக்திகளுக்கு எதிராக சமர்க்களத்தில் நின்று அயராமல் போராடி வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

உடன்பிறப்புகளின் தலைவரான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து!
Admin

“சோதனைகளை சாதனைகளாக்கி இந்தியாவிற்கே வழிகாட்டியாய், தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் தி.மு.கவின் ஒப்பற்ற தலைவர் வாழ்க வளர்க வெற்றிகள் குவிக!”

- ஆசிரியர் கி.வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்

“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து!
Admin

“பிறந்தநாள் காணும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். அவர் நலத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ ஆசீர்வதிக்கப்படுவார்.”

- ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் முன்னாள் தலைவர்

“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து!
Admin

“ஆருயிர்ச் சகோதரர் மு.க.ஸ்டாலின், தி.மு.கழகத்தை எஃகு அரணாகக் கட்டிக்காத்து வருகிறார். அவரது அடுத்த பிறந்தநாளில் முதல்வர் நாற்காலி உறுதி செய்யப்பட்டிருக்கும்.”

- வைகோ எம்.பி., ம.தி.மு.க பொதுச் செயலாளர்

“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து!
Admin

“இன்று பிறந்தநாள் காணும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! சமூகநீதியை, ஜனநாயகத்தைக் காக்கும் அறப்போராட்டத்தில் தி.மு.கவுடன் உற்றதுணையாக நிற்போம்.”

- தொல்.திருமாவளவன், எம்.பி., வி.சி.க தலைவர்

“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து!
Admin

“அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்.”

- ‘கலைஞானி’ கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர்

“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து!
Admin

“பொதுவாழ்வில் உழைத்து முன்னேறியவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். நாளை இதைவிடவும் உயர்ந்த நிலைக்கு அவர் வருவார். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்.”

- கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்

“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து!
Admin

“நாடு முழுக்க வென்ற பா.ஜ.கவை தமிழகத்தில் ஒரு இடம் கூடப் பெறமுடியாமல் செய்தது தி.மு.க கூட்டணி. மதவெறி பா.ஜ.கவை எதிர்த்துப் போராடும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.”

- கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்

“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து!
Admin

“கொள்கையையும், லட்சியத்தையும், திராவிட இயக்கத்தின் மரபுகளையும் தொடர்ந்து தூக்கிச் சுமந்துவரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.”

- பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் மூத்த தலைவர்

“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து!
Admin

“சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு தளங்களில் வகுப்புவாத வலதுசாரி சக்திகளுக்கு எதிராக பகுத்தறிவு கருத்துகளை ஆயுதமாகக் கொண்டு போராடிவரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும்.”

- இரா.முத்தரசன், சி.பி.ஐ மாநில செயலாளர்

“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து!
Admin

“இளைஞர்களை சித்தாந்த ரீதியாகத் தயார்படுத்தி, தி.மு.க-வை கொள்கைப் பிடிப்போடு கட்டமைத்து வரும் கலைஞரின் புதல்வர், மத நல்லிணக்க காவலர் மு.க.ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.”

- பேராசிரியர் அருணன், தீக்கதிர் ஆசிரியர்

“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து!
Admin

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

- நாராயணசாமி, புதுச்சேரி முதல்வர்.

banner

Related Stories

Related Stories