தி.மு.க

“அராஜக சக்திகளுக்கு எதிராக சமர்க்களத்தில் அயராமல் போராடும் தி.மு.க தலைவர்” - கொண்டாடும் உடன்பிறப்புகள்!

பாசிச, அராஜக சக்திகளுக்கு எதிராக சமர்க்களத்தில் நின்று அயராமல் போராடி வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“அராஜக சக்திகளுக்கு எதிராக சமர்க்களத்தில் அயராமல் போராடும் தி.மு.க தலைவர்” - கொண்டாடும் உடன்பிறப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 67வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தமிழர் எழுச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

1953ஆம் ஆண்டு பிறந்து 14 வயதில் அரசியலில் களம் கண்ட மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் பகுதி பொதுச் சபை உறுப்பினர், தி.மு.க இளைஞரணி செயலாளர், தி.மு.க துணை பொதுச் செயலாளர், தி.மு.க பொருளாளர், தி.மு.கவின் செயல் தலைவர் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ந்து இன்று உடன்பிறப்புகளின் தலைவனாக உயர்ந்து நிற்கிறார்.

தி.மு.க எனும் பேரியகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு சந்தித்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் வெற்றி, 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 இடங்களில் வெற்றி என தனது ஆளுமையைப் பதிவு செய்தார்.

தமிழக மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும், சமதர்மம் பேணவும் பாசிச, அராஜக சக்திகளுக்கு எதிராக சமர்க்களத்தில் நின்று அயராமல் போராடி வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“அராஜக சக்திகளுக்கு எதிராக சமர்க்களத்தில் அயராமல் போராடும் தி.மு.க தலைவர்” - கொண்டாடும் உடன்பிறப்புகள்!

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் உடல் நலிவுற்றுள்ள நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டதுடன், பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க யாரும் தன்னைச் சந்திக்க வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

ஆனாலும், தலைவரின் மீதிருக்கும் அபிமானம் காரணமாக தமிழகம் முழுவதும் இருக்கும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்பு வழங்கியும், நலத்திட்ட உதவிகள் செய்தும் எழுச்சித் தலைவரின் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாகச் சிறப்புறக் கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories