சினிமா

"இந்த நிலையை மாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும்" - அன்னபூரணி பட விவகாரம் குறித்து பிரபல இயக்குநர் கருத்து!

"இந்த நிலையை மாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும்" - அன்னபூரணி பட விவகாரம் குறித்து பிரபல இயக்குநர் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 1-ம் தேதி வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் பல்வேறு பிராமண வீட்டு பெண் ஒருவர் உணவுகலை நிபுணராகி அசைவ உணவுகளை சமைப்பது பற்றி எடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 29 ஆம் தேதி Netflix ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியானது.

ஆனால், அதன் பின்னர் அந்த படத்தில் இடம்பெற்றிருந்த கருத்துக்கள் குறித்து, சர்ச்சை வெடித்தது. இராமர் வனவாசம் சென்றபோது கறி சாப்பிட்டதாக இராமாயணத்தில் இடம்பெற்றுள்ளதாக கூடும் வாசகங்களுக்கு இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், படத்தின் இறுதி காட்சியில், கதாநாயகி பிரியாணி சமைக்கும் முன் நமாஸ் செய்யும் காட்சியும் சர்ச்சை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தை நீக்கவேண்டும் என இந்துத்துவவாதிகள் கூறி, Netflix தளத்தை புறக்கணிக்கப்போவதாக கூறினர்.

"இந்த நிலையை மாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும்" - அன்னபூரணி பட விவகாரம் குறித்து பிரபல இயக்குநர் கருத்து!

இதன் காரணமாக Netflix ஓடிடி தளத்தில் இருந்து இந்த திரைப்படம் நீக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த நடவடிக்கைக்கு இயக்குநர் வெற்றிமாறன் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் இயக்குநர் ஜியோ பேபியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "தற்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. மத மற்றும் அரசியல் காரணங்களால் சென்சார் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. படைப்பு சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையாக உறுதியாக இருப்பது அவசியம். ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் பின்வாங்கிவிடுகிறார்கள்

தங்கள் குறித்து வந்த சர்ச்சைகளை எதிர்த்து 'அன்னபூரணி' படக்குழு எதிர்க்குரல் எழுப்பவில்லை. உண்மையில், தாங்கள் ஏதோ ஒரு குற்றத்தைச் செய்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். அது சினிமாவுக்கோ, கலைஞருக்கோ, சமுதாயத்திற்கோ நல்லதல்ல. சமூகத்தின் தற்போதை நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் நிறைய கலைஞர்கள் தங்கள் கலையின் காரணமாக சிறையில் அடைக்கப்படலாம் என்பதால் நான் அச்சப்படுகிறேன். ஆனால் நாம் ஒன்றுபட்டு போராடினால் இதில் வெற்றி பெறுவோம் என்பது எனக்கு தெரியும். கலையின் மீது நம்பிக்கை உள்ளது"என்று கூறியுள்ளார். தி கிரேட் இந்தியன் கிச்சன், காதல் தி கோர் போன்ற படங்களை ஜியோ பேபி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories