அரசியல்

பெயர் பலகையில் ஞானவாபி மசூதி வார்த்தை நீக்கம்: ஞானவாபி கோவில் என ஸ்டிக்கர் ஒட்டும் இந்துத்துவ கும்பல்!

பெயர் பலகையில் ஞானவாபி மசூதி என்ற வார்த்தையை நீக்கி, ஞானவாபி கோவில் என இந்துத்துவ அமைப்பினர் ஸ்டிக்கர் ஒட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெயர் பலகையில் ஞானவாபி மசூதி வார்த்தை நீக்கம்: ஞானவாபி கோவில் என ஸ்டிக்கர் ஒட்டும் இந்துத்துவ கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

1992-ம் ஆண்டு இந்துத்துவ கும்பல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாக கூறி அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அதன்பின்னர் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள் விசாரணையில் இருந்து வந்தது.அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பாபர் மசூதி இருந்த இடத்தில ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது.

அதன் பின்னர் கடந்த மாதம் 22-ம் தேதி முழுமையாக கட்டிமுடிக்கப்படாத ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சூழலில் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியும் ஹிந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்பினர் கூறிவந்தனர்.

பெயர் பலகையில் ஞானவாபி மசூதி வார்த்தை நீக்கம்: ஞானவாபி கோவில் என ஸ்டிக்கர் ஒட்டும் இந்துத்துவ கும்பல்!

பின்னர் வாரணாசி நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்த பின்னர், அங்கு தொல்லியல்துறை ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அந்த இடத்தில் கோவில் இருந்ததாக தொல்லியல்துறை தெரிவித்தது. இதனை காரணமாக வைத்து ஞானவாபி மசூதியின் கீழ்ப்பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து அங்கு அர்ச்சகரை நியமிக்க உத்தரவிட்டது.

அதன்படி அங்கு வழிபாடும் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே அந்த பகுதியில் ஞானவாபி மசூதி என பெயர் பலகை கொண்ட இடங்களில் ஞானவாபி மசூதி என்ற வார்த்தையை நீக்கி, ஞானவாபி கோவில் என இந்துத்துவ அமைப்பினர் ஸ்டிக்கர் ஒட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories