சினிமா

2023 SPECIAL : DADA முதல் பார்க்கிங் வரை.. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர்கள்.. பட்டியல் இதோ!

இந்த ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர்களில் பட்டியல் இதோ !

2023 SPECIAL : DADA முதல் பார்க்கிங் வரை.. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர்கள்.. பட்டியல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இரத்தத்தில் கலந்தது சினிமா என்பது போல், சினிமா என்பது நாம் அனைவரின் வாழ்விலும் ஒரு அங்கமாக இருக்கிறது. அப்படி இருக்கும் சினிமாவை நம்மால் விட்டுக்கொடுக்கவும் இயலாது. சோகம், மகிழ்ச்சி, பொழுதுபோக்கு என அனைத்திலும் நம் வாழ்வில் சினிமா என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி பட்ட சினிமா இல்லாத வாழ்வை நினைத்து பார்க்கவே கடினமாக உள்ளது.

இதனை இயக்குவதற்காக இயக்குநர் என்ற தனி நபர் பல மெனக்கெடல்கள் கொடுக்கிறார். ஒரு திரைப்படம் உருவானதிலிருந்தே, இயக்குநர் என்பவர் முக்கிய பங்காற்றுகிறார். அவர் இல்லாமல் சினிமா என்பது இருக்காது என்பது போலே உள்ளது. இப்படி பட்ட இயக்குநர்கள், ஒரு படத்தை இயக்க பல வழிகளில் போராட வேண்டியதாயிருக்கிறது.

சினிமா என்பது நிரந்தர தொழில் இல்லை என்பதால், பலரது குடும்பத்தினர் பல பேரின் இயக்குநர் கனவுகளை கனத்த இதயத்துடன் கலைக்கின்றனர். சிலரே அனைத்தையும் மீறி வெளியே வந்து பல முயற்சிகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் என அனைத்தையும் சந்தித்து காத்திருந்து ஒரு வெற்றி இயக்குநராக ஆகின்றனர்.

2023 SPECIAL : DADA முதல் பார்க்கிங் வரை.. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர்கள்.. பட்டியல் இதோ!

அப்படி இந்த ஆண்டு வெளியான பல படங்களில் சிலவை ரசிகர்கள் மனதில் 'Feel Good Movie'-யாக இடம்பிடித்துள்ளது. அதனை தங்கள் முதல் படத்திலேயே கொடுத்த இயக்குநர்களில் பட்டியல் பின்வருமாறு :

=> டாடா :

10 பிப்ரவரி 2023-ல் திரையரங்குகளில் வெளியான இந்த படத்தில் கவின், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, குழந்தை நட்சத்திரம் அர்ஜுனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரொமான்டிக் ஜானரில் வெறும் ரூ.4 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படமானது, ரூ.20 கோடி வரை லாபம் ஈட்டியது. இந்த படத்தை இயக்கியவர் கணேஷ் பாபு.

அறிமுக இயக்குநர் கணேஷ் பாபு, தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் கவனத்தை தனது பக்கம் ஈர்த்தார். விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கணேஷ் பாபு தனது அடுத்த படைத்தை நடிகர் ஜீவாவை வைத்து இயக்குவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 'டாடா' திரைப்படம் Amazon Prime Video ஓடிடி தளத்தில் காணலாம்.

2023 SPECIAL : DADA முதல் பார்க்கிங் வரை.. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர்கள்.. பட்டியல் இதோ!

=> அயோத்தி :

சசிகுமார், பிரீத்தி அஸ்ரானி, யஷ்பால் சர்மா, புகழ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படமானது கடந்த 3- ம் தேதி வெளியானது. மதம் கடந்த மனிதநேயத்தை வலியுறுத்தும் இந்த படமானது விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவான இந்த படமானது, தற்போது ZEE5 ஓடிடி தளத்தில் காணலாம்.

2023 SPECIAL : DADA முதல் பார்க்கிங் வரை.. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர்கள்.. பட்டியல் இதோ!

=> குட் நைட் :

மணிகண்டன், மீதா ரகுநாத், ரேச்சல் ரெபேக்கா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படமானது கடந்த மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குறட்டை தொல்லையால் திணறும் வாலிபர், திருமணத்துக்கு பின்னரும் சந்திக்கும் பிரச்னையை ரொமான்டிக் ஜானரில் கூறும் இந்த படமானது விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மிகுந்த வரவேற்பை பெற்றது.

அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவான இந்த படமானது தற்போது Disney+ Hotstar ஓடிடி தளத்தில் காணலாம்.

2023 SPECIAL : DADA முதல் பார்க்கிங் வரை.. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர்கள்.. பட்டியல் இதோ!

=> போர் தொழில் :

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படமானது, கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் ஜானரில், சுமார் ரூ.8 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படமானது, ரூ.40 கோடி வரை வசூலித்தது. விறு விறுப்பாகவும் பரபரப்பாகவும் கதைக்களத்தை கொண்டுள்ள இந்த படத்தின் ஓடிடி ரிலீசுக்காக ரசிகர்கள் பல நாட்கள் காத்திருந்த நிலையில், 2 மாதம் கழித்து (ஆகஸ்ட் மாதம்) ஓடிடியில் வெளியானது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா, தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் கவனத்தை தனது பக்கம் ஈர்த்தார். தற்போது 'போர் தொழில்' திரைப்படம் Sony LIV ஓடிடி தளத்தில் காணலாம்.

2023 SPECIAL : DADA முதல் பார்க்கிங் வரை.. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர்கள்.. பட்டியல் இதோ!

=> ஜோ :

ரியோ, மாளவிகா மனோஜ், பாவ்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம், கடந்த நவம்பர் 24-ம் தேதி வெளியானது. கல்லூரி காதல், மோதல், நட்பு, பிரிவு உள்ளிட்டவற்றோடு திருமணம் முடிந்த பிறகு ஏற்படும் மனப்போராட்டம் உள்ளிட்டவையை பற்றி பேசப்பட்டிருக்கும் இந்த படமானது, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றது.

அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதற்படி எடுத்து வைத்து கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த படமானது Disney+ Hotstar ஓடிடி தளத்தில் வரும் 29-ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

2023 SPECIAL : DADA முதல் பார்க்கிங் வரை.. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர்கள்.. பட்டியல் இதோ!

=> பார்க்கிங் :

ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படமானது, கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சாதாரண பார்க்கிங் பிரச்சினையால் ஏற்படும் மனகசுப்புகள் ஒருவரை எந்த எல்லைக்கு எடுத்து செல்கிறது என்பதை குறித்து பேசப்பட்டிருக்கும் இந்த படம், பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமானது Disney+ Hotstar ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 5-ம் தேதி வெளியாகவுள்ளது.

banner

Related Stories

Related Stories