சினிமா

அயலான் முதல் சைரன் வரை... பொங்கல் ரேஸுக்காக தயாராக இருக்கும் முக்கிய தமிழ் படங்கள் - பட்டியல் !

அயலான் முதல் சைரன் வரை... பொங்கல் ரேஸுக்காக தயாராக இருக்கும் முக்கிய தமிழ் படங்கள் -  பட்டியல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு மொழிப்படங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். உலகம் முழுக்க நாள்தோறும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது ஒரு படமாவது வெளியாகும். அந்த வகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு திரைப்படம் வெளியானால், கூடவே இன்னும் ஒரு படமாவது வெளியாகும்.

அதிலும் பண்டிகை காலக்கட்டத்தில் சொல்லவே வேண்டாம்.. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி திரை ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழில் 4 புதிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதன் பட்டியல் பின்வருமாறு :

அயலான் முதல் சைரன் வரை... பொங்கல் ரேஸுக்காக தயாராக இருக்கும் முக்கிய தமிழ் படங்கள் -  பட்டியல் !

=> அயலான் :

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் 'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டே இந்த படம் நிறைவடைந்த நிலையில், தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில கிராபிக்ஸ் பணி காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் பொங்கலுக்கு வெளியாகிவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அயலான் முதல் சைரன் வரை... பொங்கல் ரேஸுக்காக தயாராக இருக்கும் முக்கிய தமிழ் படங்கள் -  பட்டியல் !

=> கேப்டன் மில்லர் :

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் கேப்டன் மில்லர். சமூகத்தில் ஏற்றத்தாழ்வு குறித்த பிரச்னைகள் 1930-40 காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

அயலான் முதல் சைரன் வரை... பொங்கல் ரேஸுக்காக தயாராக இருக்கும் முக்கிய தமிழ் படங்கள் -  பட்டியல் !

=> லால் சலாம் :

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டீசர், பாடல் உள்ளிட்டவை அடுத்தடுத்து அப்டேட்களாக வந்தது. இந்த படமானது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில், இந்த படம் வெளியீடு ஒத்திவைக்கப்படும் என கூறப்படுகிறது.

அயலான் முதல் சைரன் வரை... பொங்கல் ரேஸுக்காக தயாராக இருக்கும் முக்கிய தமிழ் படங்கள் -  பட்டியல் !

=> அரண்மனை 4 :

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து அப்டேட் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை என்பதால் பொங்கலுக்கு வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அயலான் முதல் சைரன் வரை... பொங்கல் ரேஸுக்காக தயாராக இருக்கும் முக்கிய தமிழ் படங்கள் -  பட்டியல் !

=> வணங்கான் :

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் உள்ளிட்ட பலரும் நடிப்பில் உருவாகி வரும் படம்தான் 'வணங்கான்'. பல பிரச்னைகளுக்கு பிறகு உருவாகி வரும் இந்த படமானது வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அயலான் முதல் சைரன் வரை... பொங்கல் ரேஸுக்காக தயாராக இருக்கும் முக்கிய தமிழ் படங்கள் -  பட்டியல் !

=> சைரன் :

அந்தோனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படமானது, இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது வெளியாகவில்லை. இந்த சூழலில் இந்த படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories