சினிமா

பிரபல மலையாள நடிகர் திடீர் கைது : பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபல மலையாள நடிகர் பினு பி.காமலை போலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் திடீர் கைது : பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பினு பி.காமல். தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மேலும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதையடுத்து சில மலையாள படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் திருவனந்தபுரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு நிலமேலுக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது இவரது இருக்கைக்கு அருகே இளம் பெண் ஒருவர் அமர்ந்துள்ளார்.

அவரிடம், நடிகர் பினு பி.காமல் தவறாக நடந்துள்ளார். இதனால் அப்பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து பேருந்திலிருந்த மக்கள் பினு பி.காமலிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவர் பேருந்திலிருந்து இறங்கி ஓடியுள்ளார்.

இருந்தும் பொதுமக்கள் அவரை விரட்டி சென்று போலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்ததன் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து நடிகர் பினு பி.காமலை கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories