இந்தியா

13 முறை கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண் : காதலன் வெறிச்செயலுக்கான காரணம் என்ன ?

ஒருதலை காதலால், இளம்பெண்ணை 13 முறை குத்திய காதலனின் செயல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

13 முறை கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண் : காதலன் வெறிச்செயலுக்கான காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தெற்கு டெல்லியில் அமைந்துள்ளது லடா சராய் என்ற பகுதி. இங்கு 23 வயது இளம்பெண் ஒருவர் வருகிறார். இந்த சூழலில் இவரை உத்தர பிரதேசத்தை சேர்ந்த கெளரவ் பால் (27) என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அரியானாவில் உள்ள குருகிராமில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

தொடர்ந்து 2 வருடங்களாக அந்த இளம்பெண்ணை காதலித்து இவர், அந்த பெண்ணிடம் தனது காதலை பலமுறை கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பெண் தான் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் இந்த காதலுக்கு அவர் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. எனினும் இந்த இளைஞர் விடாமல் துன்புறுத்தியுள்ளார்.

13 முறை கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண் : காதலன் வெறிச்செயலுக்கான காரணம் என்ன ?

இந்த சூழலில் சம்பவத்தன்று மாலை சுமார் 6 மணியளவில் அந்த பெண் வெளியில் செல்வதற்காக கேப் ஒன்றை புக் செய்துள்ளார். அந்த கார் வந்ததும் ஏறி உள்ளே அமர, உடனே இந்த இளைஞரும் காருக்குள் நுழைந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அந்த கார் ஓட்டுநர் தடுக்க முயன்றும் முடியவில்லை.

அந்த பெண்ணுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த இந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுமார் 13 முறை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அந்த பெண்ணின், முகம், கழுத்து, கை, கால், உடல் உட்பட பல பகுதிகளில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.

13 முறை கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண் : காதலன் வெறிச்செயலுக்கான காரணம் என்ன ?

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இது ஒருதலை காதல் விவகாரத்தில் நேர்ந்த சம்பவம் என்று தெரியவந்தது.

இதையடுத்து தப்பியோடிய குற்றவாளி கெளரவை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories